அக்டோபர் 2-ம் தேதி வெளியாகும் ஜீவாவின் யான்!
ஜீவா நடிக்கும் யான் படம் வரும் அக்டோபர் 2-ம் தேதி காந்தி பிறந்த நாளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.
பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்குநராக அறிமுகமாகும் படம் யான். இப்படத்தில் ஜீவா - ராதா மகள் துளசி ஆகியோர் நடித்து வருகின்றனர். நாசர், பிரகாஷ் ராஜ் என பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் படப்பிடிப்புகளை நடத்தி முடித்துள்ள படக்குழுவினர் சமீபத்தில் இறுதிக் கட்டமாக சுவிட்சர்லாந்தில் பாடல் காட்சிகளைப் படமாக்கினர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகின. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டிரைலரும் வெளியானது. ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. குறிப்பாக போலீஸ் உடையில் தங்கள் ஹீரோவைப் பார்த்து ஏக மகிழ்ச்சியில் உள்ளனர் ரசிகர்கள்.

இப்பது யான் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வரும் அக்டோபர் 2ம் தேதி உலகமெங்கும் வெளியிடப் போவதா ஆர்எஸ் இன்போடெயின்மென்ட் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











