சூப்பர் காம்பினேஷனில் வெளியாகும் யானை படம்... ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : நடிகர் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகிவரும் படம் யானை.

இயக்குநர் ஹரியுடன் அருண் விஜய் முதல்முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.

இந்தப் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் தற்போது ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

யானை படம்

யானை படம்

நடிகர் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், ராதிகா, கங்கை அமரன், யோகிபாபு, சினேகன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் யானை. இந்தப் படத்தில் முதல்முறையாக அருண் விஜய்யை இயக்குநர் ஹரி இயக்கியுள்ளார். முன்னதாக சேவல், சிங்கம் படங்களின் வரிசையில் தற்போது யானையை கையில் எடுத்துள்ளார்.

ரிலீசுக்கு தயார்

ரிலீசுக்கு தயார்

இந்தப் படத்தில் அருண் விஜய்யின் அண்ணனாக சமுத்திரக்கனி நடித்துள்ளார். கேஜிஎப் புகழ் கருடா ராம் வில்லனாக மிரட்டியுள்ளார். காரைக்குடி, பழனி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. படத்தின் இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தாறுமாறு போஸ்டர்கள்

தாறுமாறு போஸ்டர்கள்

மேலும் படத்தின் போஸ்டர்களும் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. அருண் விஜய்யின் 33வது படமாக யானை உருவாகியுள்ளது.அருண் விஜய் அடுத்தடுத்த படங்களில் சிறப்பான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் படத்தின் பிரமோஷனை படக்குழு முடுக்கி விட்டுள்ளது.

ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரிலீஸ் தேதி அறிவிப்பு

படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் இரு பாடல்கள் வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளன. டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் படத்தை தயாரித்துள்ளது. இதனிடையே, தற்போது படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனமான டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் அறிவித்துள்ளது. வரும் மே மாதம் 6ம் தேதி கோடைக் கொண்டாட்டமாக படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

படம் ரிலீஸ் குறித்து அருண் விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தொடர்ந்து கேட்டு வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஹரி இயக்கத்தில் சூர்யாவின் சிங்கம் மிகுதியான வரவேற்பை பெற்றது. படத்தின் மூன்றாவது பாகம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

கிராமத்து கெட்டப்

கிராமத்து கெட்டப்

இந்நிலையில் தற்போது இந்த யானைப் படம் ரசிகர்களிடையே எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். சிறப்பான வெற்றிப் படங்களை கொடுத்துவரும் அருண் விஜய் முற்றிலும் மாறுபட்டு கிராமத்து கெட்டப்பில் இந்தப் படத்தில் நடித்துள்ளார். அவரின் இந்த கெட்டப் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X