யானை படத்தோட சாட்டிலைட் -டிஜிட்டல் உரிமையை யார் வாங்கியிருக்காங்க பாருங்க!

சென்னை : நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் யானை. படத்தை அவருடைய மைத்துனர் ஹரி இயக்கியுள்ளார்.

அருண் விஜய் -ஹரி கூட்டணி முதல் முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

இந்தப் படம் விரைவில் ரிலீசாக உள்ள நிலையில் மிகப்பெரிய தொகைக்கு படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை முன்னணி நிறுவனத்திற்கு கைமாறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் அருண் விஜய்

நடிகர் அருண் விஜய்

நடிகர் அருண் விஜய் சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவரது அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் அவருக்கு சிறப்பாக அமைந்தது. தொடர்ந்து சிறப்பான படங்கள் சிறப்பான இயக்குநர்களின் இயக்கத்தில் அவருக்கு அமைந்து வருகிறது.

ஹரியுடன் கூட்டடணி

ஹரியுடன் கூட்டடணி

இந்நிலையில் அவர் தனது மைத்துனர் ஹரியுடன் முதல்முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் யானை. சூர்யாவை வைத்து சிங்கம் பட வரிசையை அடுத்தடுத்து இயக்கிய ஹரி, தற்போது யானை தலைப்புடன் அருண் விஜய்யை இயக்கியுள்ளார். சிங்கம் படங்கள் அவருக்கு சிறப்பாக கைகொடுத்த நிலையில் தற்போது யானையை கையில் எடுத்துள்ளார் ஹரி.

அருண் விஜய்யின் 33வது படம்

அருண் விஜய்யின் 33வது படம்

இந்தப் படம் அவரது 33வது படமாக அமைந்துள்ளது. படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. படத்தில் அவருக்கு ஜோடியாகியுள்ளார் பிரியா பவானி சங்கர். மேலும் படத்தில் ராதிகா சரத்குமார், யோகிபாபு, சினேகன், கங்கை அமரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வில்லனாக மிரட்டும் கருடா ராம்

வில்லனாக மிரட்டும் கருடா ராம்

படத்தில் அருண் விஜய்க்கு அண்ணனாக சமுத்திரககனி நடித்துள்ளார். கேஜிஎப் படப்புகழ் கருடா ராம் படத்தில் வில்லனாக நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, பழனி, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. படத்தை டிரம்ஸ்டிக் நிறுவனம் தயாரித்துள்ளது.

வரவேற்பை பெற்ற போஸ்டர்கள்

வரவேற்பை பெற்ற போஸ்டர்கள்

இந்தப் படம் அருண் விஜய்யின் 33வது படம் என்பதால் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பை அதர்வா, ஆர்யா உள்ளிட்ட 33 திரைப்பிரபலங்கள் வெளியிட்டனர். அதேபோல படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது.

அடுத்தடுத்த புகைப்படங்கள்

அடுத்தடுத்த புகைப்படங்கள்

மேலும் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்த அருண் விஜய், எங்களின் குடும்பம் என்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து டப்பிங் பணிகளை நிறைவு செய்து அந்தப் படத்தையும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

சாட்டிலைட், டிஜிட்டல் உரிமை

சாட்டிலைட், டிஜிட்டல் உரிமை

விரைவில் படம் ரிலீசாக உள்ள நிலையில், தற்போது படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளை ஜீ தமிழ் நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு கைப்பற்றியுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில் படத்தின் ஏலம்மா ஏலா பாடல் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X