போதையை விட்டு வாலே... அரைக்கூவல் விடும் நடிகர் அருண் விஜய்
சென்னை : நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் யானை.
சிங்கம் படங்களை எடுத்து வெற்றிக் கண்ட இயக்குநர் ஹரி தற்போது யானை படத்தை இயக்கியுள்ளார்.
விரைவில் ரிலீசாகவுள்ள இந்தப் படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

யானை படம்
நடிகர் அருண் விஜய், பிரியா பவானி, சமுத்திரக்கனி, யோகிபாபு, சினேகன், ராதிகா, கங்கை அமரன் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து ரிலீசுக்கு தயாராகிவரும் படம் யானை. இதில் கேஜிஎப் புகழ் கருடா ராம் வில்லனாக இணைந்துள்ளார்.

அருண் விஜய்யின் 33வது படம்
அருண் விஜய்யின் 33வது படமான இந்தப் படத்தை முதல்முறையாக இயக்குகிறார் இயக்குநர் ஹரி. ராமேஸ்வரம், தூத்துக்குடி, காரைக்குடி, பழனி உள்ளிட்ட இடங்களில் படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளது. படத்தில் கிராமத்து கெட்டப்பில் நடித்துள்ளார் அருண் விஜய்.

ஹிட் கட்டாயம்
முன்னதாக சேவல், சிங்கம், சிங்கம் 2 மற்றும் சிங்கம் 3 ஆகிய பறவைகள் மற்றும் விலங்குகளின் பெயர்களில் படங்களை இயக்கிய ஹரி, தற்போது யானை என்ற தலைப்புடன் களமிறங்கியுள்ளார். கடந்த சிங்கம் 3 படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்காத நிலையில், தற்போது இந்தப் படத்தை ஹிட்டாக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

ஜிவி பிரகாஷ் இசை
இந்தப் படத்தின் போஸ்டர்கள், டீசர் உள்ளிட்டவை வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. மேலும் படத்தின் ஏலம்மா ஏலோ என்ற மெலடி பாடல் ஜிவி பிரகாஷ் இசையில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் அடுத்த பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டாவது பாடல் வெளியீடு
இந்தப் பாடலை பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ் வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலை சிறப்பான குத்துப் பாடலாக அமைந்துள்ளது. பாடலை அறிவு எழுதி ஜிவி பிரகாஷுடன் இணைந்து பாடியுள்ளார். கிராமத்து ஸ்டைலில் சிறப்பாக அமைந்துள்ளது பாடல்.

அதிரடி ஆக்ஷன் படம்
தேர்ந்தெடுத்த கதைகளில் நடித்துவரும் நடிகர் அருண் விஜய், அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். இந்நிலையில், கிராமத்து சப்ஜெக்டுடன் யானை படத்தில் களமிறங்கவுள்ளார். அதிரடி ஆக்ஷன் படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











