ஒரே நாளில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மாஸ் காட்டும் யானை டீசர்!
சென்னை: நடிகர் அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெறித்தனமாக உருவாகி வருகிறது யானை திரைப்படம்
ஜிவி பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்க பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்து வருகிறார்
மாஸான வசனங்களுடன் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான யானை டீசர் இப்போது ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து இணையதளத்தில் மாஸ் காட்டி வருகிறது

ஹரியின் இயக்கத்தில் யானை
நடிகர் அருண் விஜய்யின் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படமும் தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் மற்ற மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்வதால் இவரது திரைப்படங்கள் மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது. தடம்,குற்றம் 23 என வித்தியாச வித்தியாசமான கதைகளை தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருண் விஜய் இப்போது முதன் முறையாக இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் யானை என்ற படத்தில் நடித்து வருகிறார்

பிரியா பவானி சங்கர் அருண் விஜய்க்கு ஜோடியாக
விக்ரம், சூர்யா, விஷால்,என பல முன்னணி நடிகர்களுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்த ஹரி முதன்முறையாக அருண் விஜய்யுடன் இணைந்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான ஹரியின் திரைப்படங்களில் என்னவெல்லாம் இருக்குமோ அத்தனை அம்சங்களும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன. மாஃபியாவை தொடர்ந்து பிரியா பவானி சங்கர் அருண் விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில் நடித்துள்ளார்.

மழையில் சொட்டச் சொட்ட நனைந்தவாறு துவம்சம் செய்கிறார்
காதல்,பாசம், துரோகம் என அனைத்தும் கலந்த குடும்ப கதை களத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் பக்கா ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த நிலையில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த யானை டீசர் சமீபத்தில் வெளியானது. பாம்பன் பாலம், காதல், துரோகம், எதிரியை என டீசர் தொடங்கும்போதே வசனங்கள் தெறிக்க மழையில் சொட்டச் சொட்ட நனைந்தவாறு கையில் மண்ணால் செய்த பிள்ளையாரை தூக்கிக் கொண்டு வரும் அருண் விஜய் அங்குள்ள எதிரிகளை அடித்து துவம்சம் செய்கிறார்.

ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்தது
தூக்கி சுமக்கவும் தெரியும் தேவைப்பட்டால் தூக்கி போட்டு மிதிக்கவும் தெரியும் என வெறித்தனமான வசனங்களுடன் வெளியான யானை டீசர் வெளியான ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து மாஸ் காட்டி வருகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ள யானை டீசரை தொடர்ந்து மிக விரைவிலேயே ட்ரைலர் வெளியாக இருக்க வரும் பொங்கலுக்கு இந்த திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











