யானை படத்தின் சூப்பர் எக்சைட்மெண்ட் அப்டேட்... மாலையில் வெளியாக இருக்கு
சென்னை : நடிகர் அருண் விஜய், ப்ரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், ராதிகா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் யானை,
இந்தப் படத்தை இயக்குநர் ஹரி இயக்கியுள்ளார். படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இன்று மாலை படம் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்றை வெளியிட உள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

யானை படம்
நடிகர் அருண் விஜய், பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ் மற்றும் ராதிகா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் யானை. படத்தை அருண் விஜய்யின் தங்கை கணவரும் பிரபல இயக்குநருமான ஹரி இயக்கியுள்ளார்.

அருண்விஜய்யுடன் இணைந்த ஹரி
முன்னதாக சூர்யா நடிப்பில் சிங்கம் படத்தின் அடுத்தடுத்த பாகங்களை இயக்கிய ஹரி, தற்போது யானை தலைப்பை கையிலெடுத்துள்ளார். இந்தப் படத்தில் அருண் விஜய் மற்றும் ஹரி இருவரும் முதல் முறையாக இணைந்துள்ளனர். இது படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூட்டிங் நிறைவு
படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அருண் விஜய் மற்றும் பிரியா பவானி சங்கர் இருவரும் தங்களது டப்பிங் பணிகளை முடித்துள்ளனர். இதையடுத்து மற்றவர்களும் டப்பிங்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மாலையில் சூப்பர் அப்டேட்
விரைவில் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தற்போது இன்று மாலை சூப்பர் அப்டேட் வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
இன்னும் சில மணிநேரங்களில் இந்த அப்டேட் வெளியாகவுள்ள நிலையில், அருண் விஜய் ரசிகர்கள் இந்த அறிவிப்பை ட்ரெண்டாக்கி வருகின்றனர். சூர்யாவின் சிங்கம் படம் சிறப்பான வெற்றி பெற்ற நிலையில் தற்போது யானை படத்திற்கும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.


Click it and Unblock the Notifications











