யாரையும் இவ்வளோ அழகா பாக்கல...கார்த்திக்காக சிம்பு பாடிய பாடல்
சென்னை : கார்த்தி நடித்து வரும் சுல்தான் படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மெர்வின் சாலமோன் இசையில் உருவான, நெஞ்சை கவரும் மெலோடி பாடலை சிம்பு பாடி உள்ளார்.
Recommended Video

யாரையும் இவளோ அழகா பார்க்கல என துவங்கும் பாடலை தான் சிம்பு பாடி உள்ளார். இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடல் பற்றி கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், சில பாடல்கள் என்னை அமைதியாக்கும், நம்மை உணரச் செய்யும். அப்படி ஒரு பாடல் தான் இதுவும். சிம்புவுக்கு என் ஸ்பெஷல் நன்றி. இந்த பாடலை சிறப்பான பாடலாக மாற்றுவதற்கு அவர் எடுத்துக் கொண்ட முயற்சிக்கு நன்றி. லவ் யூ ப்ரோ. ராஷ்மிகாவிற்கு இது புதிய சூழல் என குறிப்பிட்டுள்ளார்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கிய சுல்தான் படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, யோகி பாபு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஏப்ரல் 2 ம் தேதி ரிலீசாக உள்ளது.


Click it and Unblock the Notifications











