Yaathisai Box Office: வெறும் 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட யாத்திசை.. முதல் நாள் வசூல் இதோ!

சென்னை: அறிமுக இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புதுமுகங்களான சேயோன், சக்தி மித்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் ஏப்ரல் 21ம் தேதி வெளியான வரலாற்றுத் திரைப்படமான யாத்திசை பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது.

பாகுபலி மற்றும் பொன்னியின் செல்வன் படங்களுடன் வெறும் 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான ஒரு படம் பேசப்படுவதே அந்த படத்திற்கு கிடைத்த பெரு வெற்றியாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், முதல் நாளில் அந்த படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்கிற விபரத்தை இங்கே விரிவாக பார்ப்போம் வாருங்கள்..

Yaathisai Budget and Day 1 Box Office collection is here

பாண்டியர்களின் படை பலம்: பொன்னியின் செல்வன் படத்தில் சோழர்களின் வருகையை இயக்குநர் மணிரத்னம் காட்டிய நிலையில், அதற்கு போட்டியாக பாண்டியர்களின் படை பலத்தையும் குறுநில மன்னர்களான எயினர்களின் படை பலத்தையும் பறைசாற்றும் விதமாக யாத்திசை படத்தை இயக்குநர் தரணி ராசேந்திரன் எடுத்துக் காட்டி இருக்கிறார்.

7 கோடி தான் பட்ஜெட்: 100 கோடியில் உருவான கேஜிஎஃப் 2 படத்திற்கு கடும் போட்டியாக 16 கோடியில் உருவான காந்தாரா படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. இந்நிலையில், வெறும் 7 கோடி பட்ஜெட்டில் புதியவர்களின் முயற்சிக்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

அறிமுக நடிகர்கள் தேர்ந்த நடிகர்களாக நடித்துள்ளனர் என்றும் அதிகமான ரிசர்ச் செய்து இந்த படத்தை உருவாக்கி உள்ளனர் என்றும் 7ம் நூற்றாண்டை அப்படியே கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றனர் என்று பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. விமர்சன ரீதியாகவும் இந்த படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

யாத்திசை முதல் நாள் வசூல்: பெரிய நடிகர்கள் நடிக்காமல் பிரம்மாண்ட விளம்பரங்கள் செய்யாமல் வெளியான யாத்திசை திரைப்படம்,

Yaathisai Budget and Day 1 Box Office collection is here

தமிழ்நாட்டில் - 60 லட்சம்
கர்நாடகாவில் - 5 லட்சம்
கேரளாவில் 3 லட்சம்
ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் - 4 லட்சம்
வட இந்தியாவில் - 1 லட்சம்
ஓவர்சீஸில் - 4 லட்சம்

என மொத்தமாக 77 லட்சம் வரை வசூல் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை மேலும், இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X