தொடரும் சோகம்.. பிரபல தயாரிப்பாளர் கொரோனாவுக்கு பலி.. அதிர்ச்சியில் தமிழ் சினிமா!

சென்னை: கொரோனா தொற்றுக்கு மேலும் ஒரு பிரபல தயாரிப்பாளர் பலியாகியுள்ள சம்பவம் தமிழ் சினிமாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிபோரின் எண்ணிக்கை இந்தியாவில் ஒரு நாளைக்கு 4 லட்சத்தை தாண்டியுள்ளது.

உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாடு முழுவதும் நாள்தோறும் 2 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது.

பிரபலங்களும் தப்பவில்லை

பிரபலங்களும் தப்பவில்லை

பல மாநிலங்களில் உடல்களை தகனம் செய்ய முடியாமல் உடல்களுடன் உறவினர்கள் காத்துக் கிடக்கின்றனர். இதனால் மக்கள் பீதியடைந்து வருகின்றனர். கொரோனா தொற்றுக்கு சினிமா நட்சத்திரங்களும் தப்பவில்லை.

ஒரே வாரத்தில் 3 பேர் பலி

ஒரே வாரத்தில் 3 பேர் பலி

பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவை பொறுத்தவரை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 பிரபலங்கள் கொரோனா தொற்று காரணமாக பலியாயினர்.

தயாரிப்பாளர் பாபு ராஜா

தயாரிப்பாளர் பாபு ராஜா

கடந்த 26ஆம் தேதி அரசு, சத்ரபதி உள்ளிட்ட பல படங்களை தயாரித்துள்ள பிரபல தயாரிப்பாளரான சூப்பர் குட் பிலிம்ஸ் பாபு ராஜா காலமானார் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இயக்குநர் தாமிரா

இயக்குநர் தாமிரா

இதேபோல் பிரபல இயக்குநரான தாமிரா கடந்த 27ஆம் தேதி காலமானார். ரெட்டைச்சுழி, ஆண் தேவதை ஆகிய படங்களை இயக்கியுள்ள தாமிரா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி காலை தாமிரா காலமானார்.

இயக்குநர் கேவி ஆனந்த்

இயக்குநர் கேவி ஆனந்த்

அவரை தொடர்ந்து நேற்று முன்தினம் அயன், மாற்றான், அனேகன், காப்பான் ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்த பிரபல இயக்குநரான கேவி ஆனந்த் கொரோனாவுக்கு பலியானார். கடந்த 24ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கேவி ஆனந்த் கடந்த 30ஆம் தேதி காலை மரணமடைந்தார்.

தயாரிப்பாளர் முத்துக்குமரன்

தயாரிப்பாளர் முத்துக்குமரன்

இந்நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபலத்தை இழந்துள்ளது தமிழ் சினிமா. அதாவது, தமிழில் குழந்தை வேலப்பன் இயக்கத்தில் கிருஷ்ணா நடித்து வெளியான படம் யாக்கை. இப்படத்தின் தயாரிப்பாளர் முத்துக்குமரன் சுப்பிரமணியன்.

மருத்துவமனையில் சிகிச்சை

மருத்துவமனையில் சிகிச்சை

47 வயதான முத்துக்குமரன் சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

பிரபலங்கள் இரங்கல்

பிரபலங்கள் இரங்கல்

இதையடுத்து அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், நேற்று சிகிச்சைப் பலனின்றி முத்துக்குமரன் நேற்று காலமானார். மறைந்த முத்துக்குமரனுக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: covid 19
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X