கழுத்தில் பலத்த காயம்.. கொரோனா லாக்டவுனால் மீண்ட பிரபல ஹீரோயின்.. எப்படி? விளக்கும் நடிகை!

By

சென்னை: பிரபல நடிகை இந்த லாக்டவுனில் தனது கழுத்து காயத்தில் இருந்து மீண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Vijay ன் நீண்ட நாள் போராட்டம் வெற்றி

தமிழில் ராதா மோகன் இயக்கிய கவுரவம் படத்தில் நடித்திருந்தவர் இந்தி நடிகை யாமி கவுதம்.

கவுதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில், ஜெய், சந்தானம் நடித்த தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற படத்திலும் நடித்திருந்தார்.

கின்னி வெட்ஸ் சன்னி

கின்னி வெட்ஸ் சன்னி

இந்தப் படங்களை அடுத்து தமிழில் நடிக்காத யாமி கவுதம் இந்தியில் கவனம் செலுத்தி வருகிறார். அங்கு, அஜய் தேவ்கனின் ஆக்‌ஷன் ஜாக்சன், உரி: த சர்ஜிக்கல் ஸ்டிரைக், சர்கார் 3, பாலா உட்பட பல படங்களில் நடித்துள்ள அவர், அடுத்து கின்னி வெட்ஸ் சன்னி என்ற படத்தில் நடித்து வருகிறார். லாக்டவுன் காரணமாக இதன் படப்பிடிப்பு தடைபட்டுள்ளது.

கழுத்தில் காயம்

கழுத்தில் காயம்

இந்நிலையில், இந்த லாக்டவுனில் தனது கழுத்து காயத்தில் இருந்து மீண்டுள்ளதாக யாமி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: கடுமையான கழுத்துவலியால் பாதிக்கப்பட்டிருந்தேன். அதனால் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருந்தேன். நடிகை என்பதால், நடனம், ஒர்க் அவுட், இடைவிடாத பயணம் காரணமாக உடல் உழைப்பின் அளவு முடிவில்லாததாக இருந்தது.

பயிற்சியை தொடர்ந்தேன்

பயிற்சியை தொடர்ந்தேன்

உடலுக்குள் இருக்கும் வலிகள் வெளியே தெரிவதில்லை. இந்நிலையில் இந்த லாக்டவுனில் இதற்கு முன்னால் செய்யாத ஒன்றைத் தொடர முடிவு செய்தேன். ஒவ்வொரு முறையும் யோகா செய்ய முயலும்போது, என் வலி காரணமாக முடியாமல் இருப்பேன். இப்போது அதை தாங்கிக் கொண்டு லாக்டவுனில் பயிற்சியை தொடர்ந்து செய்தேன்.

நிறுத்தமாட்டேன்

நிறுத்தமாட்டேன்

இப்போது குணமாகி இருக்கிறேன். முன்பை போல உணர்கிறேன். இந்தப் பயணத்தின் முதல் அடியை எடுத்து வைத்துள்ளேன். இனி நிறுத்தமாட்டேன். இவ்வாறு கூறியுள்ள யாமி கவுதம், யோகா செய்வது போன்ற போட்டோவையும் பதிவிட்டுள்ளார். யோகா கற்றுக்கொடுத்தவர்கள் பற்றியும் தெரிவித்துள்ளார். பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். யோகாவைத் தொடர்ந்து செய்யுங்கள், நிச்சயம் பலன் உண்டு என்று பலர் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X