பேண்ட் அணியாததால் நடிகையின் தங்கையை வெளியே அனுப்பிய உணவகம்
Recommended Video

மும்பை: நடிகை யாமி கவுதமின் தங்கை சுரிலி பேண்ட் அணியாததால் உணவகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
பாலிவுட் நடிகை யாமி கவுதமின் தங்கை சுரிலி அக்கா வழியில் நடிகையாகியுள்ளார். பவர் கட் என்ற பஞ்சாபி படம் மூலம் சுரிலி நடிகையானார். யாமி தற்போது உரி என்னும் இந்தி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
உரி படப்பிடிப்பு தற்போது செர்பியாவில் நடந்து வருகிறது.

தங்கை
யாமியுடன் அவரது தங்கை சுரிலியும் செர்பியா சென்றுள்ளார். இருவரும் சேர்ந்து ஜாலியாக இருக்கும் புகைப்படங்களை யாமி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.

சுரிலி
செர்பியாவில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அக்காவும், தங்கையும் சென்றுள்ளனர். சுரிலி தொடை தெரியும்படி குட்டியாக உடை அணிந்து சென்றுள்ளார்.
பேண்ட்
பேண்ட் அணியாமல் வந்திருக்கிறீர்கள் என்று கூறி சுரிலியை உணவகத்தை விட்டு வெளியேற்றிவிட்டனர். இதை பார்த்த யாமி தனது தங்கையை கலாய்த்து வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

புதுப்படம்
சுரிலி பாட்டில் ஆஃப் சரகார்ஹி படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். ராஜ்குமார் சந்தோஷி இயக்கும் இந்த படத்தில் ரந்தீப் ஹூடா ஹீரோவாக நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











