திருமணமாகி ஒரே மாதத்தில் பிரபல நடிகைக்கு இப்படியொரு சோதனையா? மோசடி வழக்கில் சிக்கிய யாமி கவுதம்!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை யாமி கவுதமுக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியிருப்பது பரபரப்பை கிளப்பி இருக்கிறது.
கடந்த ஜூன் 4ம் தேதி தான் திடீரென திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஷாக் கொடுத்திருந்தார் யாமி கவுதம்.
வரும் வாரத்திற்குள் அமலாக்கத் துறைக்கு முன் ஆஜராகவில்லை என்றால் நடிகை யாமி கவுதம் மீது நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

யாமி கவுதமுக்கு சம்மன்
தமிழில் கெளரவம், தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் என இரு படங்களில் நடித்துள்ளார் நடிகை யாமி கவுதம். பாலிவுட் நடிகையான இவர் அந்நிய செலவாணி சட்டத்திற்கு மீறி மோசடி செய்துள்ளதாக அமலாக்கத் துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.

அந்நிய செலாவணி மோசடி
FEMA (Foreign Exchange Management Act) எனும் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்திற்கு எதிராக மோசடி செய்துள்ளதாக நடிகை யாமி கவுதம் மீது புகார் எழுந்திருக்கிறது. மேலும், ஒன்றரை கோடி ரூபாய் பணம் அந்நிய செலாவணி மோசடி மூலமாக நடிகையின் கணக்கில் சமீபத்தில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத் துறையினர் அறிவித்துள்ளனர்.

மீறினால் நடவடிக்கை
வரும் ஜூலை 7ம் தேதிக்குள் அமலாக்கத் துறையிடம் நேரடியாக ஆஜராகி உரிய விளக்கம் தர வில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சம்மன் அனுப்பியுள்ளனர். ஏற்கனவே ஒரு முறை சம்மன் அனுப்பியதற்கு நடிகை தரப்பில் இருந்து எந்தவொரு பதிலும் வரவில்லையாம்.

ஹனிமூன் பிசி
கடந்த ஜூன் 4ம் தேதி தான் நடிகை யாமி கவுதமுக்கும் இயக்குநர் ஆதித்யா தர்ருக்கும் திருமணம் நடைப்பெற்றது. இருவரும் ஹனிமூன் பிசியில் இருக்கும் நிலையில், இப்படி புதுமண தம்பதிகளை தொல்லை செய்றாங்களே என யாமி கவுதமின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ட்விட்டர் டிரெண்டிங்
#YamiGautam என்ற ஹாஷ்டேக்கையே உருவாக்கி நடிகை யாமி கவுதம் மோசடி விவகாரத்தை ட்விட்டரில் டாப் டிரெண்டிங்காக நெட்டிசன்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். அரசுக்கு எதிராக எந்தவொரு கருத்தையும் யாமி கவுதம் தெரிவிக்கவில்லையே, பின்னர் ஏன் அவர் மீது இந்த திடீர் நடவடிக்கை என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











