லாக்டவுன் முடியும்னு எதிர்பார்த்தா வயசாகிடும்.. சட்டுப்புட்டுன்னு திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை!

மும்பை: தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் பஞ்சாபி என பல மொழிகளில் நடித்துள்ள நடிகை யமி கவுதம் உரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக் பட இயக்குநரை திருமணம் செய்து கொண்டார்.

நெருங்கிய குடும்ப உறவினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

திருமணம் ஆன தகவலை போட்டோ போட்டு இயக்குநரும் நடிகை யமி கவுதமும் தெரிவித்துள்ளனர்.

யமி கவுதம்

யமி கவுதம்

1988ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி பிறந்த நடிகை யமி கவுதமுக்கு தற்போது 32 வயதாகிறது. ஃபேர் அண்ட் லவ்லி விளம்பரங்கள் மூலம் நாடு முழுக்க பிரபலமான இவர், 2009ம் ஆண்டு உல்லாசா உத்சாஹா எனும் கன்னட படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

Recommended Video

5 Unreleased Movies in Tamil | Naragasooran, Dhruva Natchathiram..
பாலிவுட் நடிகை

பாலிவுட் நடிகை

அதை தொடர்ந்து பஞ்சாபி மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்த யமி கவுதம் 2012ம் ஆண்டு பாலிவுட்டில் விக்கி டோனர் படத்தின் மூலம் அறிமுகமானார். டோட்டல் சியாப்பா, ஆக்‌ஷன் ஜான்சன், பாத்லாபூர், சனம் ரே, ஜூனியாத், காபில், சர்கார் 3, உரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக், பாலா உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்துள்ளார்.

தமிழில்

தமிழில்

இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் 2013ம் ஆண்டு வெளியான அல்லு சிரிஷின் கவுரவம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான தமிழ்ச்செல்வியும் தனியார் அஞ்சலும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இயக்குநருடன் திருமணம்

இயக்குநருடன் திருமணம்

உரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஆதித்யா தர் உடன் காதலில் விழுந்த நடிகை யமி கவுதம் தற்போது அவரை திருமணம் செய்து கொண்டார். திருமண கோலத்தில் இருவரும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த செய்தியை ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார் யமி கவுதம்.

லாக்டவுன் காரணமாக

லாக்டவுன் காரணமாக

பாலிவுட்டே வியந்து பார்க்கும் அளவுக்கு பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்த திட்டமிட்டு கடந்த ஓராண்டாக திருமணத்தை தள்ளிப் போட்டு வந்த இருவரும், இந்த லாக்டவுன் இப்போதைக்கு முடிவுக்கு வராது, நாம இருவரும் திருமண உறவில் லாக் ஆகிவிட வேண்டியது தான் என நினைத்து சிம்பிளாக நெருங்கிய குடும்ப உறவினர்களுடன் ரகசியமாக இந்த திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர்.

மணமக்களுக்கு வாழ்த்து

மணமக்களுக்கு வாழ்த்து

பாலிவுட்டின் முன்னணி நடிகையான யமி கவுதம் மற்றும் இளம் பாலிவுட் இயக்குநர் ஆதித்யாவின் திருமணம் பற்றி அறிந்த பாலிவுட் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மணமக்களை சமூக வலைதளங்களில் வாழ்த்தி வருகின்றனர். இவர்களது திருமண புகைப்படமும் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X