ஜூனியர் ராக்கி பாய் போட்டோவை வெளியிட்ட நடிகர் யஷ்.. கே.ஜி.எஃப் 25-ம் பாக ஹீரோ என புகழும் ஃபேன்ஸ்!

By

பெங்களூரு: கேஜிஎப் ஹீரோ யஷ் வெளியிட்டுள்ள அவர் மகனின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended Video

KGF Yash Shared his son Ayush first Picture | Radhika Pandit

பிரபல கன்னட ஹீரோ யஷ். கே.ஜி.எஃப் படம் மூலம் இந்தியா முழுவதும் அறிமுகமானவர். இந்தப் படம் கன்னடம், தமிழ் உட்பட 5 மொழிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

படம் ஹிட்டானதை அடுத்து இதன் இரண்டாம் பாகத்தில் இப்போது நடித்து வருகிறார். முதல் பாகத்தில் நடித்த ஶ்ரீனிதி ஷெட்டி, ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர்.

அதிக எதிர்பார்ப்பு

அதிக எதிர்பார்ப்பு

முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இதையும் இயக்குகிறார். பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத், அதீரா என்ற வில்லனாக நடிக்கிறார். ரவீணா டாண்டன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முதல் பாகத்தைப் போல இந்தப் படத்துக்கும் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆவதாக இருந்தது. கொரோனா காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

யஷ், ராதிகா பண்டிட்

யஷ், ராதிகா பண்டிட்

இந்நிலையில் தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள் நடிகர் யஷ்ஷும், அவர் மனைவி நடிகை ராதிகா பண்டிட்டும். இருவரும் மிஸ்டர் அண்ட் மிசஸ் ராமாச்சாரி என்ற கன்னடப் படத்தில் நடித்தபோது காதலில் விழுந்தனர். சில வருடங்களாகக் காதலித்த அவர்கள், கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

ஆண் குழந்தை

ஆண் குழந்தை

இவர்களுக்கு அயிரா என்ற மகள் இருக்கிறார். பின்னர், கடந்த வருடம் அக்டோபர் மாதம் ராதிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து மகனின் புகைப்படத்தை வெளியிடுங்கள் என்று ரசிகர்கள், அவர்களின் சமூகவலைத்தள கணக்கில் கோரிக்கை வைத்தபடி இருந்தனர். இந்நிலையில், நடிகர் யஷ்ஷும் ராதிகா பண்டிட்டும் தங்கள் செல்ல மகனின் போட்டோவை வெளியிட்டுள்ளனர்.

ஆசிர்வாதம்

ஆசிர்வாதம்

'என் செல்ல மகனுக்கு ஹலோ சொல்லுங்கள், உங்கள் அன்பையும் ஆசியையும் அவனுக்கு கொடுங்கள்' என்று தெரிவித்துள்ளார் யஷ். இதையடுத்து ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். சில ரசிகர்கள், ஜூனியர் ராக்கி பாய் என்று அவர் மகனைக் குறிப்பிட்டுள்ளனர். 'பையன் உங்களை விட சூப்பரா இருக்கான் என்று சிலரும், 'கே.ஜி.எஃப் பார்ட் 25-ல் இவர்தான் ஹீரோ' என்று சிலரும் ஜாலியாக கமென்ட் அடித்துள்ளனர்.

வைக்கவில்லை

வைக்கவில்லை

பலர் குழந்தையின் பெயர் என்ன என்று கேட்டுள்ளனர். இன்னும் பெயர் சூட்டு விழா நடக்கவில்லை என்று சிலர் பதில் தெரிவித்துள்ளனர். 'பையன் கண்டிப்பாக எதிர்காலத்துல மிரட்டுவான், அதுக்கான அறிகுறி தெரியுது, யஷ்' என்று சிலரும் 'அப்பாவை மிஞ்சிருப்பா' என்று சிலரும் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X