ஜனநாயகனை தொடர்ந்து டாக்ஸிக் படமும் தள்ளிப்போனது.. ஜூன் நாயகன் கூட அப்போ சான்ஸ் கிடையாதா?
சென்னை: யஷ் நடித்துள்ள டாக்ஸிக் திரைப்படத்தின் ரிலீஸ் மார்ச் 19 என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது டாக்ஸிக் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போடப்பட்டுள்ளதாக யஷ் அறிவித்து ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார். மேலும், ஜூன் மாதம் தான் டாக்ஸிக் திரைப்படம் வெளியாகும் என அறிவித்துள்ளார்.
ஜன நாயகன் படத்தை தயாரித்த கேவிஎன் தயாரிப்பு நிறுவனத்துக்கு இந்த ஆண்டு அடி மேல் அடி விழுந்துக் கொண்டே இருக்கிறது. எப்படியும் துரந்தர் 2 படத்துடன் டாக்ஸிக் மோத வாய்ப்பே இல்லை என ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

இந்நிலையில், துரந்தர் 2 மட்டுமே மார்ச் 19ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடித்த டாக்ஸிக் திரைப்படத்தின் ரிலீஸ் அதிரடியாக தள்ளிப்போயுள்ளது. அதற்கான காரணத்தையும் விளக்கத்தையும் யஷ் அளித்துள்ளார்.
டாக்ஸிக் ரிலீஸ் புதிய தேதி: கேவிஎன் தயாரிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள டாக்ஸிக் திரைப்படம் மார்ச் 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜூன் 4ம் தேதி தான் படம் வெளியாகும் என யஷ் அறிவித்துள்ளார்.
என்ன காரணம்?: டாக்ஸிக் திரைப்படம் திட்டமிட்டபடி மார்ச் 19ம் தேதி வெளியாகாமல் போனதற்கு காரணமே மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் போர் பதற்றம் தான் காரணம் என யஷ் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். ஈரான் மற்றும் இஸ்ரேஸ் இடையேயான போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் பெரிய பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், ஓவர்சீஸ் வசூல் பாதிக்கும் என்பதால் யஷ் இந்த முடிவை எடுத்துள்ளார்.
ஜன நாயகன் ரிலீஸ் அப்போ?: கேவிஎன் நிறுவனம் தயாரிப்பில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு நடித்துள்ள ஜன நாயகன் திரைப்படம் ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜூன் 4ம் தேதி டாக்ஸிக் வெளியாகும் நிலையில், அதே ஜூன் மாதம் ஜன நாயகன் வராது என்று தெரிகிறது. அதற்கு முன்னதாக தளபதி தரிசனம் கிடைக்கவும் வாய்ப்புகள் அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதமே ஜன நாயகனை கேவிஎன் நிறுவனம் வெளியிடுமா? அல்லது ஜெயிலர் 2வுடன் மோத விடுவார்களா? என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும். இந்த மாதம் துரந்தர் 2 மட்டுமே ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. அந்த படக்குழு என்ன அறிவிப்பை வெளியிடப்போகின்றனரோ தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











