Yash: பொட்டிக்கடையில பொண்டாட்டிக்கு குச்சி மிட்டாய் வாங்கிக் கொடுத்த கேஜிஎஃப் ஹீரோ.. ஊரே கூடிடுச்சு!
பெங்களூர்: கேஜிஎஃப் படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமான கன்னட நடிகர் யஷ் தனது மனைவிக்கு ரோட்டோரம் உள்ள பொட்டிக் கடையில் மிட்டாய் வாங்கி கொடுத்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகின்றன.
2007-ம் ஆண்டு ஜெய் ஆகாஷ் நடிப்பில் வெளியான ஜம்பட உடுகி படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் யஷ். 38 வயதாகும் இவர் கன்னடத்தில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். சிவராஜ்குமார், உபேந்திரா, கிச்சா சுதீப் மற்றும் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்ட கன்னட நடிகர்கள் யாரும் செய்யாத அளவுக்கு கன்னட திரை உலகின் வசூலை கேஜிஎஃப் படங்களின் மூலமாக மிகப்பெரிய அளவில் ஈட்டி சாதனை படைத்துள்ளார்.

ராக்கி பாய்: 2008 ஆம் ஆண்டு ராக்கி என்னும் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் யஷ் ராஜ்தானி, லக்கி, ஜானு, ட்ராமா, மிஸ்டர் அண்ட் மிஸ்டர் ராமாச்சாரி, மாஸ்டர் பீஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கே ஜி எஃப் முதல் பாகம் ராக்கி பாயாக இந்திய ரசிகர்கள் மத்தியில் நடிகர் யஷ்ஷை கொண்டு சென்றது. அதன் இரண்டாம் பாகம் 1100 கோடிக்கு மேல் வசூல் செய்து மிரட்டியது.

பொட்டிக் கடையில்: வட கன்னட மாவட்டத்தின் பத்கல் எனும் வட்டத்தில் உள்ள சிராலி எனும் உள்ள சித்ரபூர் மாதா கோயிலுக்கு தனது குடும்பத்துடன் சென்றிருக்கிறார் யஷ். அப்போது அங்கே உள்ள பொட்டிக் கடையில் இருந்த ஐஸ் கேண்டி மீது யஷ்ஷின் மனைவி ராதிகா பண்டித் ஆசைப்பட உடனடியாக அந்த கடைக்கு சென்று மிட்டாய் வாங்கி கொடுத்திருக்கிறார். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.

அசந்து போன ஊர் மக்கள்: பெரிய ஸ்டார் என்றதும் சாதாரண பொட்டி கடைக்கு எல்லாம் செல்வார்களா என நினைத்துக் கொண்டிருந்த ஒரு மக்கள் நடிகர் எஸ் டவுன் டு எர்த்தாக தனது மனைவியின் ஆசையை தீர்த்து வைக்க அங்கிருந்து கடைக்கு சென்று மிட்டாய் வாங்கி கொடுத்ததை பார்த்த ஊர் மக்கள் அசந்து போய் நடிகர் யஷ் உடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். அடுத்ததாக டாக்ஸிக் எனும் படத்தில் நடித்து வரும் யஷ் மீண்டும் பிரசாந்த் நீல் உடன் இணைந்து கேஜிஎஃப் 3 படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











