மகளுக்கு காது குத்தியதை பார்த்து அழுத நடிகர்: கலாய்த்த மனைவி

By Siva

பெங்களூர்: கன்னட நடிகர் யஷ் தனது மகளுக்கு காது குத்தியபோது கண் கலங்கியுள்ளார்.

கே.ஜி.எஃப். படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார் கன்னட நடிகர் யஷ். அவரின் மனைவியும், நடிகையுமான ராதிகா பண்டிட் கடந்த டிசம்பர் மாதம் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு ஐரா என்று பெயர் வைத்துள்ளனர்.

Yash cried after seeing daughter Ira crying

இந்நிலையில் ஐராவுக்கு காது குத்தியுள்ளனர். காது குத்தியபோது ஐரா அழுதை பார்த்த யஷும் கண் கலங்கிவிட்டாராம். ஐரா ரொம்ப அழுததை பார்த்து தங்களின் இதயங்கள் நொறுங்கிவிட்டதாக ராதிகா தெரிவித்துள்ளார்.

முதல் முறையாக தனது கணவரின் கண்களில் கண்ணீரை பார்த்ததாக கூறி ஐரா கம்மல் போட்டிருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ராதிகா. யாரும் கவலைப்பட வேண்டாம், அப்பாவும் மகளும் தற்போது நலமாக உள்ளனர் என்று கிண்டல் செய்துள்ளார் அவர்.

ஜென்மாஷ்டமி அன்று ஐராவுக்கு கிருஷ்ணன் வேடம் போட்டு எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் ராதிகா. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தாங்கள் இதுவரை பார்த்த கிருஷ்ணர்களிலேயே இவர் தான் அழகு என்று ஐராவை பற்றி தெரிவித்துள்ளனர்.

கன்னட திரையுலக ரசிகர்களிடையே ஐரா மிகவும் பிரபலம். யஷ், ராதிகா ஆகியோர் தங்களின் ரசிகர்களுக்காக மகள் ஐராவின் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

ராதிகா தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். முன்னதாக கர்ப்பத்தை அறிவித்து வெளியிடப்பட்ட வீடியோவை பார்த்தும், மேக்கப் கலைஞர் கொடுத்த பரிசை காட்டி வெளியிட்ட வீடியோவை பார்த்தும் ரசிகர்கள் யஷ், ராதிகாவை விளாசினார்கள்.இந்நிலையில் வெளியான ஐராவின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அசந்துவிட்டனர். சிலரோ, என்ன மேடம் யஷ் கண் கலங்கிய புகைப்படத்தை வெளியிடக் கூடாதா என்று கேட்டுள்ளனர்.

யஷ் தற்போது ஜே.ஜி.எஃப். படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X