ராமாயணம் படத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறாரா?.. நைசாக ஒதுங்கிய கேஜிஎஃப் ஹீரோ.. அப்படின்னா அந்த ரோலா?

சென்னை: பிரபாஸ் நடிப்பில் கடந்த ஆண்டு ஆதிபுருஷ் திரைப்படம் ராமாயண கதையை அடிப்படையாக கொண்டு உருவானது. இந்நிலையில், இன்னொரு ராமாயணம் படத்திற்கும் சீக்கிரமே பூஜை போட்டு ஆரம்பித்து விடுவார்கள் என்றே தெரிகிறது. அமீர்கானை வைத்து தங்கல் படத்தை எடுத்த பிரபல பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் இந்தியில் பிரம்மாண்டமாக ராமாயணம் திரைப்படம் உருவாக போகிறது.

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், க்ரித்தி சனோன், சைஃப் அலிகான் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் பெரிதளவில் ஓடாத நிலையில், மீண்டும் ஒரு ராமாயண படத்தை பாலிவுட்டில் இயக்க உள்ளனர். சமீபத்தில், அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்ட நிலையில், ராமர், ஹனுமான் படங்களுக்கு அதிகளவில் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.

Yash exit and Vijay Sethupathi entered in Ranbir Kapoors Ramayana?

ஹனுமான் வசூல்: வால்மீகி எழுதிய ராமாயணத்தில் ராமருக்கு பக்க துணையாக இருந்தது அனுமான் தான். சமீபத்தில் தெலுங்கில் வெளியான ஹனுமான் திரைப்படம் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் திரைப்படத்தையே வீழ்த்தி விட்டது. வெறும் 20 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட ஹனுமான் படத்தில் தேஜா சஜ்ஜா, அம்ரிதா அய்யர், வரலட்சுமி சரத்குமார், வினய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். டோலிவுட்டை தாண்டி பாலிவுட் பெல்ட்டில் அந்த படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைக்க 250 கோடி வசூலை கடந்து 300 கோடியை நெருங்கி வருகிறது என்கின்றனர்.

ரன்பீர் கபூரின் ராமாயணம்: பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் திரைப்படம் சொதப்பி விட்டது. இந்நிலையி, ரன்பீர் கபூர் நடிப்பில் ராமாயணம் படத்தை உருவாக்க தங்கல் படத்தை இயக்கிய நித்தேஷ் திவாரி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டாராம். ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி மற்றும் இராவணனாக யஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது யஷ் விலகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராவணனாக யஷ் நடிக்கவில்லை: வட இந்திய நடிகரை ராமராகவும் தென்னிந்திய நடிகரை ராவணனாகவும் போட வேண்டும் என்கிற முயற்சியில் ஈடுபட்டு வந்த நிதேஷ் திவாரிக்கு யஷ் தற்போது அந்த படத்தில் நடிக்கப் போவதில்லை என விலகி விட்டதாக கூறியது ஷாக்கை கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டாக்ஸிக் படத்தில் நடித்து வரும் யஷ் அடுத்து கேஜிஎஃப் 3 படத்தில் தான் கவனம் செலுத்தப் போகிறார் என்கின்றனர்.

ராமாயண படத்தில் விஜய்சேதுபதி?: ஷாருக்கானின் ஜவான், கத்ரீனா கைஃப் உடன் மெரி கிறிஸ்துமஸ் படங்கள் மூலம் பாலிவுட்டில் அதிக ரசிகர்களை கவர்ந்துள்ள விஜய்சேதுபதி தற்போது ராமாயணம் படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் ராவணனாக விஜய்சேதுபதி நடிப்பாரா? அல்லது வேறு கதாபாத்திரமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

சன்னி தியோல்: கதர் 2 படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற சன்னி தியோலும் தற்போது ராமாயணம் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அனிமல் படத்தில் ஆபாசமாக நடித்த ரன்பீர் கபூரை வைத்தா ராமாயணம் படத்தை எடுக்கப் போறீங்க என நெட்டிசன்கள் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். ஏற்கனவே பிரம்மாஸ்திரம் படம் ரன்பீர் நடித்து ஓடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X