twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் Yash க்கு இங்கே ரசிகர்கள் இல்லை… கேஜிஎப் 2 ஆல் தள்ளிப்போன கூகுள் குட்டப்பா.

    |

    சென்னை : இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் நடித்து தயாரித்திருக்கும் திரைப்படம் கூகுள் குட்டப்பா.

    தமிழ் சினிமாவில் கேஎஸ் ரவிக்குமார் பிரம்மாண்ட இயக்குநர் ஆக வலம் வந்தவர். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினி, கமலை வைத்து பல படங்களை இயக்கியவர்.

    இன்று ரிலீசாக இருக்கும் கூகுள் குட்டப்பா படத்திற்காக அவர் தொடர் பிரமோஷன்களில் பங்கு கொண்டு வருகிறார். அங்கு கேட்கப்படும் பல கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.

    சிவகார்த்திகேயனின் டான் அந்த படங்களின் காப்பியா? மேடையில் இப்படி சொல்லிட்டாரே எஸ்.ஜே. சூர்யா!சிவகார்த்திகேயனின் டான் அந்த படங்களின் காப்பியா? மேடையில் இப்படி சொல்லிட்டாரே எஸ்.ஜே. சூர்யா!

    கேஎஸ் ரவிக்குமார் இரண்டாவது படம்

    கேஎஸ் ரவிக்குமார் இரண்டாவது படம்

    இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தயாரிக்கும் இரண்டாவது படம் கூகுள் குட்டப்பா. அவர் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நடிகர் தர்ஷன் மற்றும் லாஸ்லியா அவருக்கு இணையான கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இவர்களோடு யோகி பாபு, பிரங்க்ஸ்டர் ராகுல், பூவையார், மூர்த்தி போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். கூகுள் குட்டப்பா திரைப்படம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் U-5-25 படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இப்படத்தின் பிரமோஷனுக்காக பல தனியார் சேனல்களுக்கு இன்டர்வியூ தந்து வருகிறார் கேஎஸ் ரவிக்குமார். அதில் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் மிகவும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கேஜிஎப் 2 வால் தள்ளிப்போன படம்

    கேஜிஎப் 2 வால் தள்ளிப்போன படம்

    கே எஸ் ரவிக்குமார் நடித்து இருக்கும் கூகுள் குட்டப்பா திரைப்படம் அனைத்து வேலைகளையும் முடித்து தயாராக இருந்த நிலையில் திரைக்கு முன்பே வராததற்கு Yash நடித்து மிகப்பெரும் வெற்றி பெற்ற கேஜிஎப் 2 ஒரு காரணமாக அவர் குறிப்பிட்டுள்ளார். " கூகுள் குட்டப்பா படத்தை எங்கோ ஒரு மூலையில் இருக்கும் திரையரங்குகளில் திரையிட முயற்சி செய்தபோது, கேஜிஎப் 2 நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது இப்போது எந்த படமும் திரையிட இயலாது என சொன்னார்கள் " என்று குறிப்பிட்டுள்ளார். கேஜிஎஃப் படத்தின் வெற்றிக்கு காரணம் அதில் நடித்த கதாநாயகன் இல்லை. அவர் ஏற்று நடித்த ராக்கி பாய் கதாபாத்திரம்தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    OTT Platform

    OTT Platform

    OTT பற்றிய கேள்விக்கு பதிலளிக்கும்போது " OTT என்பது சினிமா துறைக்கு கிடைத்த வரப்பிரசாதம் என நான் சொல்வேன். திரையரங்குகளுக்கு வந்தால் தேராது எனும் படங்கள், பெரிய நடிகர்கள் நடித்து திரையரங்குகளில் வெற்றி பெறாது எனும் படங்களை OTT நிறுவனங்கள் தூக்கிக் கொண்டு செல்கின்றது. அதிலும் குறிப்பிட்டு பெரிய படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை தருகின்றனர். இரண்டு சதவிகிதம் மட்டுமே சிறிய படங்களை வாங்குகின்றனர். சிறிய படங்கள் திரையரங்குகளில் வெற்றி பெற்ற பின்பே அதை வாங்கும் முடிவை எடுக்கின்றனர். இதற்கு காரணம் பப்ளிசிட்டி என அவர்கள் சொல்கிறார்கள் என குறிப்பிட்டிருக்கிறார் கேஎஸ் ரவிக்குமார்.

    முழுநீள கதாபாத்திரம்

    முழுநீள கதாபாத்திரம்

    கூகுள் குட்டப்பா படத்தில் நீங்கள் நடித்த கதாபாத்திரத்தை பற்றி சொல்லுங்கள் எனக் கேட்டதும், கேஎஸ் ரவிக்குமார் அதற்கு விரிவாக ஒரு பதிலை அளித்துள்ளார். கூகுள் குட்டப்பா படத்தில் முழுநீள முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இதுவரை வேறு எந்த படத்திலும் இதுபோல நான் நடித்ததில்லை. எனது உதவி இயக்குநர்கள் இந்த படத்தில் தன்னை நடிக்கும்படி கேட்டுக் கொள்ள நானும் சரி என்றேன். ஒரு கட்டத்தில் இதன் தயாரிப்பு நிறுவனம் படத்தை கைவிட்டதும் எனது உதவி இயக்குனர்களுக்கு கைகொடுக்கும் விதமாக படத்தை நானே தயாரிக்க முடிவு செய்தேன். அப்படியாக இந்த கூகுள் குட்டப்பா படம் ஆரம்பமானது என குறிப்பிட்டுள்ளார். கமல்ஹாசன் நடித்த தெனாலி படத்தை தயாரித்தவர் கேஎஸ் ரவிக்குமார். தற்போது அவர் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் கூகுள் குட்டப்பா. இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Yash Have No Fans Here and Koogle Kuttappa Movie Late Release Because of KGF 2 Says KS Ravi Kumar
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X