Yash Networth: சீரியல் நடிகர் டூ கேஜிஎஃப் ராக்கி பாய்... கிடுகிடுவென உயர்ந்த யாஷ் சொத்து மதிப்பு!
சென்னை: கன்னட சினிமாவில் இருந்து பான் இந்தியா சூப்பர் ஹீரோவாக மாஸ் காட்டி வருபவர் யாஷ். சீரியல் நடிகராக தனது பயணத்தை தொடங்கிய யாஷ், இன்று கேஜிஎஃப் ராக்கி பாயாக வலம் வருகிறார். இந்நிலையில், இன்று தனது 38வது பிறந்தநாள் கொண்டாடும் யாஷுக்கு திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்து தெரியவந்துள்ளது.
கேஜிஎஃப் ஹீரோ யாஷ் சொத்து மதிப்பு: 2018ம் ஆண்டு வெளியான கேஜிஎஃப் திரைப்படம் பான் இந்தியா அளவில் பிரபலமானவர் நடிகர் யாஷ். பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎஃப் முதல் பாகமும் இரண்டாம் பாகமும் இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்தது. கன்னட திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த இந்தப் படம், ஹீரோ யாஷ்க்கும் பெரிய கம்பேக் கொடுத்தது. காரணம் இவர் சீரியல் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள பூவனஹள்ளி என்ற கிராமத்தில் பிறந்தவர் யாஷ். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த யாஷ், ஆரம்பத்தில் சீரியல் நடிகராக தான் தனது கேரியரை தொடங்கியுள்ளார். அதற்கும் முன்னதாக இவர் உதவி இயக்குநராகவும் வேலை பார்த்துள்ளார். ஆனால், அதில் வருமானம் குறைவாக இருந்ததால், சீரியலில் நடிகராக களமிறங்கியுள்ளார். அதன்படி 2004ல் உத்தராயணம் என்ற சீரியலில் அறிமுகமான அவர், தொடர்ந்து மேலும் பல நாடகங்களில் நடித்துள்ளார்.
அதன்பின்னர் 2007ல் ஜம்படா ஹுடுகி என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் தடம் பதித்துள்ளார். இவர் நடித்த கிராடகா என்ற படம் தமிழில் சூப்பர் ஹிட்டான களவாணி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி சின்ன பட்ஜெட் படங்களில் மட்டுமே நடித்து வந்த யாஷுக்கு கேஜிஎஃப் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியான கேஜிஎஃப் முதல் பாகம் சக்கைபோடு போட்டது.
அதனைத் தொடந்து கேஜிஎஃப் இரண்டாம் பாகம் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூலித்து மாஸ் காட்டியது. இதனால் ரசிகர்கள் மத்தியில் கேஜிஎஃப் ராக்கி பாய் என பிரபலமான யாஷ், இப்போது கன்னட சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு உயர்ந்துவிட்டார். கேஜிஎஃப் வெற்றியைத் தொடர்ந்து டாக்ஸிக் என்ற படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில், 38வது பிறந்தநாளை கொண்டாடும் யாஷுக்கு திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
சீரியலில் ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கிய யாஷ், சினிமாவில் லட்சங்களில் சம்பளம் வாங்கவே படாதபாடு பட்டுள்ளார். ஆனால், கேஜிஎஃப் கொடுத்த அடையாளம் யாஷை இப்போது கோடிகளில் புரள வைத்துள்ளது. அதன்படி ஒரு படத்துக்கு 6 கோடி வரை சம்பளம் வாங்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இதுதவிர விளம்பரங்களிலும் அதிகமாக நடித்து வருகிறார் யாஷ். அதனால் மாதம் 60 லட்சம் வரை சம்பாதிக்கும் யாஷ், ஆண்டுக்கு 8 கோடி வரை வருமானம் ஈட்டுகிறார்.
பெங்களூருவில் வசிக்கும் யாஷின் அப்பார்ட்மெண்ட் விலை 6 கோடி என சொல்லப்படுகிறது. அதேபோல் விதவிதமான சொகுசு கார்களையும் சொந்தமாக வைத்துள்ளார் யாஷ். சுமார் 90 லட்சம் மதிப்புடைய Mercedes Benz GLS 7 சீட்டர், 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள Mercedes GLC 250D Coupe, a 5-seater, 80 லட்சம் மதிப்பிலான Audi Q7, 70 லட்சம் மதிப்புடைய BMW 520D, 40 லட்சம் மதிப்பிலான Pajero Sports ஆகிய கார்களையும் சொந்தமாக வைத்துள்ளார்.
அதன்படி யாஷின் சொத்து மதிப்பு மொத்தம் 60 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவையனைத்தும் 5 ஆண்டுகளில் யாஷ் சம்பாதித்தது எனவும் சொல்லப்படுகிறது. கேஜிஎஃப் என்ற ஒரே படம் மூலம் பல கோடிகளுக்கு அதிபதியாகியுள்ளார் யாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











