கொண்டாட வேண்டிய நேரத்தில் சோகத்தில் இடிந்து போயிருக்கும் இளம் நடிகர்

By Siva

Recommended Video

KGF Actor Yash Is Upset | நடிகருக்காக தீக்குளித்து உயிரை விட்ட ரசிகர்

பெங்களூர்: கொண்டாட வேண்டிய நேரத்தில் இடிந்து போயிருக்கிறார் நடிகர் யஷ்.

யஷ் நடிப்பில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான கே.ஜி.எஃப். படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. யஷ் படம் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது.

ரூ. 200 கோடி வசூலித்த முதல் கன்னட படம் கே.ஜி.எஃப் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் இரண்டாம் பாகமும் வர உள்ளது.

சாதனை

சாதனை

கன்னட திரையுலகின் வெற்றி நாயகனாக வலம் வரும் யஷ் கே.ஜி.எஃப். படம் மூலம் புதிய சாதனை படைத்துள்ளார். இந்த வெற்றியை கொண்டாட வேண்டிய நேரத்தில் அவர் இடிந்து போய் கண் கலங்கியுள்ளார். அவரின் நிலையை பார்த்து ரசிகர்களும் கவலையில் உள்ளனர்.

யஷ்

யஷ்

யஷ் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்ததை அடுத்து ரவி என்ற ரசிகர் தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். மருத்துவமனையில் அவரை பார்த்த யஷிடம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று கூறிவிட்டு உயிரை விட்டுவிட்டார். இந்த சம்பவத்தால் யஷ் மிகுந்த மன வேதனையில் உள்ளார்.

படம்

படம்

ரவி இறந்ததை பார்த்த யஷ் எனக்கு இந்த துறையும் வேண்டாம், வாழ்க்கையும் வேண்டாம் என்று எமோஷனலாகிவிட்டார். யஷ் கூறியதை கேட்டவர்கள் அவர் இனி நடிக்கவே மாட்டாரா என்று கேள்வி எழுப்பினார்கள். ரவியின் மரணம் யஷை பெரிய அளவில் பாதித்துவிட்டது. தன்னை சந்திக்க ஒருவர் உயிரை விட்டதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

கவலை

கவலை

கே.ஜி.எஃப். பட சாதனையை பற்றி தேசிய மீடியாக்கள் பேசிக் கொண்டிருக்கின்றன. ரவியின் மரணத்தால் அவரால் அந்த வெற்றியை பெரிதாக பார்க்க முடியவில்லை. தனக்காக யாரும் உயிரை விட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். ரவியின் மரணத்தை ஒரு நாளும் மறக்கவே முடியாது என்கிறார் யஷ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X