twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேஜிஎஃப் 2 உண்மையான ‘ராக்கி பாய்’ இவர் தானா?... வெளியான ரகசியம்!

    |

    சென்னை : கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தில் ராக்கி பாய் கதாபாத்திரம் ஒருவரின் வாழ்க்கைக் கதையில் இருந்து எடுக்கப்பட்ட உண்மையான சம்பவம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    யாஷ்,ஸ்ரீநிதி ஷெட்டி, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

    இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பான் இந்திய படமாக ஏப்ரல் 14ந் தேதி வெளியானது.

    என்னை பாதிச்ச உண்மை சம்பவங்கள்... சூர்யா படம் பத்தி சுதா கொங்கரா சொன்ன சீக்ரெட்! என்னை பாதிச்ச உண்மை சம்பவங்கள்... சூர்யா படம் பத்தி சுதா கொங்கரா சொன்ன சீக்ரெட்!

    கேஜிஎஃப் 2

    கேஜிஎஃப் 2

    பிரசாந்த் நீலின் இயக்கத்தில் யாஷ் நடித்த கேஜிஎஃப் 2 பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்துள்ளது இரண்டு வாரங்களுக்குப் பிறகும் இன்னும் வலுவாக உள்ளது. இப்படம் உலகம் முழுவதும் இதுவரை 645 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. படத்தின் வெற்றியை படக்குழு கொண்டாடி வரும் நேரத்தில் இத்திரைப்படம் குறித்து ஓர் சர்ச்சை எழுந்துள்ளது.

    உண்மை கதாபாத்திரம்

    உண்மை கதாபாத்திரம்

    இந்நிலையில், இத்திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட திரைப்படம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, பிரபல சந்தனக் கடத்தல் வீரப்பன் போல, கர்நாடகாவில் பிறந்த தங்கம் என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படம் என்று தங்கத்தின் அம்மா பவுலி கூறியுள்ளார்.

    உண்மையான ‘ராக்கி பாய்'

    உண்மையான ‘ராக்கி பாய்'

    என் மகன் தங்கம் கோலார் தங்கச் சுரங்கத்தில் தொழிலாளியாக வேலை செய்தார். மேலும், அங்கு ஒரு கும்பலை உருவாக்கிக் கொண்டு சுரங்கங்களில் இருந்த தங்கத்தை கொள்ளையடிக்கும் பணியில் ஈடுபட்டார். மேலும், தான் கொள்ளை அடித்த பணத்தில் பாதியை ஏழை, எளிய மக்களுக்கு கொடுத்து உதவினார். கர்நாடக போலீசாருக்கு சவால் விட்ட தங்கத்தின் மீது மொத்தம் 42 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 1997 டிசம்பர் 27 அன்று போலீசாரால் தங்கம் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

    Recommended Video

    Yashஐ Rocky Bhaiயாக தெரியும்...ஆனால் இப்படி யாருக்காவது தெரியுமா ?|Filmibeat Tamil
    கெட்டவனாக காட்டி உள்ளனர்

    கெட்டவனாக காட்டி உள்ளனர்

    தங்கத்தின் அம்மா பவுலி, என் மகனின் கதையை என் அனுமதி இல்லாமல் எடுத்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் என் மகனை கெட்டவனாக சித்தரித்து இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் படத்தின் தயாரிப்பாளர்கள் தங்கத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படம் இல்லை என்று கூறியுள்ளனர். அதேபோல், இயக்குனர் பிரசாந்த் நீலும் கேஜிஎஃப் 2 உண்மை ஒரு கதை என்பதை மறுத்துள்ளார்.

    English summary
    Yash’s character Rocky in the film is said to be inspired by the life of dreaded criminal Thangam
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X