நடிகர் வீட்டு வாசலில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த ரசிகர் பலி
Recommended Video

பெங்களூர்: நடிகர் யஷின் தீவிர ரசிகர் தீக்குளித்ததில் உயிர் இழந்தார்.
யஷ் நடிப்பில் கன்னடம், தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் வெளியான கே.ஜி.எஃப். படம் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது. ரூ. 200 கோடி வசூல் செய்த முதல் கன்னட படம் என்ற பெறுமையை கே.ஜி.எஃப். பெற்றுள்ளது.
இந்நிலையில் நேற்று யஷின் பிறந்தநாள் ஆகும்.

யஷ்
கன்னட திரையுலகமே வியக்கும் வகையில் வெற்றிப் படம் கொடுத்த யஷ் நேற்று தனது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியிருக்க வேண்டும். ஆனால் அவர் தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை. மேலும் யாரும் கொண்டாட வேண்டாம் என்று தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டார்.

அம்பரீஷ்
நடிகர் அம்பரீஷ் அண்மையில் காலமானார். அவரை யஷ் தன் வீட்டின் மூத்த உறுப்பினராக நினைத்து வந்தார். அத்தகையவர் இறந்த நிலையில் அவர் தனது பிறந்தநாளை கொண்டாட விரும்பவில்லை. இதை அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார். தனது முடிவுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் ஃபேஸ்புக்கில் தெரிவித்திருந்தார்.

தற்கொலை
யஷ் தனது பிறந்தாளை கொண்டாடவில்லை என்பதை அறிந்து ரசிகர்கள் கவலை அடைந்தனர். இதையடுத்து ரவி என்கிற ரசிகர் யஷ் வீட்டு வாசலில் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றி அருகில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதித்தனர். தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்றும் வரும் ரவியை மருத்துவமனைக்கு சென்று பார்த்து நலம் விசாரித்தார் யஷ். இந்நிலையில் ரவி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

ஹீரோ
யஷ் தனது பிறந்தநாள் அன்று ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் கொண்டாடுவார். நேற்று அவர் யாரையும் சந்திக்கவில்லை. யஷ் ரசிகர்கள் கூடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அவர் வீட்டிற்கு அருகில் உள்ள ஹோட்டல் ஒன்று 25 கிலோ பிரியாணி செய்து வைத்திருந்ததாம்.


Click it and Unblock the Notifications











