பாகுபலியை முந்திய கேஜிஎப்… இந்தி படங்களை ஓரங்கட்டிய Yash
சென்னை - மிகவும் எதிர்பார்க்கப்படும் கேஜிஎப் 2 திரைப்படம் இன்று உலகெங்கிலும் திரையிடப்பட்டுள்ளது. Yash கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். ஸ்ரீநிதி செட்டி கதாநாயகியாக நடித்துள்ளார்.
உலகெங்கிலும் Pan India படமாக ரிலீஸ் ஆகும் முதல் கன்னடப் படம் கே ஜி எஃப் 2.
கே ஜி எஃப் 2 ரிலீசுக்கு முன்பே பல ரெக்கார்ட்களை பிரேக் செய்துள்ளது. அட்வான்ஸ் புக்கிங்கில் பல பெரிய ஹீரோக்கள் படங்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது. இந்திய சினிமாவாக பார்க்கப்படும் இந்தியில் கேஜிஎப் 2 ஒரு அரிய சாதனையை செய்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்புடன் கேஜிஎப் 2
பிரசாந்த் நீல் இயக்கத்தில் Yash கதாநாயகனாக நடிக்கும் கேஜிஎப் 2 கோலாகலமாக இன்று ரிலீசானது. இதன் முதல் பாகம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ரிலீசாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அது வரை வேறு எந்த கன்னட படமும் செய்யாத பல சாதனைகளை செய்து கன்னட படத்தின் ரேஞ்சை உயர்த்தியது. தென்னிந்திய சினிமாக்களின் தரத்தை உரக்கச் சொன்ன பாகுபலிக்கு பிறகு கேஜிஎப் 2 அதை செய்து காட்டியுள்ளது.

Pan India படமாக மாறிய கேஜிஎப் 2
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நான்கு வருடங்களுக்கு முன்பு ரிலீசான கேஜிஎப் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்தியா முழுக்க வசூலை அள்ளி குவித்தது. கேஜிஎப் படத்தின் வெற்றி அதன் இரண்டாம் பாகத்தை பெரிய அளவில் உருவாக்க திட்டமிட்டு, படத்தில் சில முக்கிய கதாபாத்திரங்களில் பிரபலமான ஆட்களை நடிக்க வைக்க முடிவு செய்து, கேஜிஎப் 2 வில்லனாக சஞ்சய் தத்தை நடிக்க வைத்தனர். அதோடு மட்டுமில்லாமல் பிரகாஷ்ராஜ், ரவீனா டாண்டன், ராம் ரமேஷ் போன்ற பிரபலமான நடிகர்களை நடிக்க வைத்தனர். கேஜிஎப் 2 டீசர் மற்றும் டிரைலர் ரிலீசாகி வரலாறு காணாத பார்வைகளை பெற்று அங்கேயும் சாதனை படைத்தது.

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த கேஜிஎப் 2
இன்றைக்கு ரிலீஸ் ஆன கேஜிஎப் படத்திற்கான விமர்சனங்கள் வரத் துவங்கியுள்ளன. வெளிவரும் ஒட்டுமொத்த விமர்சனங்களும் படம் சூப்பர்ஹிட் என்றே சொல்கிறது. படம் பார்த்து வெளியே வரும் மக்களின் கருத்துக்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதில் அனைத்து மக்களும் ஒரே விதமாக படம் சூப்பர், நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் இரண்டு மடங்கு இருக்கிறது என்றும், இதை பார்த்து தமிழ் சினிமா கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பதிவு செய்கின்றனர். ஒட்டுமொத்தமாக படம் சூப்பர் ஹிட்டானதால் படக்குழு சந்தோஷத்தில் இருப்பதாக தகவல் வருகிறது.
Recommended Video

பாலிவுட்டை ஓரங்கட்டிய Yash
கே ஜி எஃப் 2 திரைப்படம் பல புதிய சாதனைகளை படைத்து வருகிறது. ஹிந்தியில் இதுவரை எந்த பாலிவுட் படமும் செய்யாத சாதனை இந்த படம் செய்துள்ளது. முதல்நாள் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் இல் பல பெரிய ஹிந்தி படங்களை ஓரங்கட்டி உள்ளது. மொத்தமாக 31 கோடி மதிப்பிலான டிக்கெட்டுகள் அட்வான்ஸ் புக்கிங் செய்யப்பட்டு வரலாறு படைத்துள்ளது. இது Dabaang 3, Good newwz, Tanjaji, Gangubhai Kathiawadi போன்ற பெரிய படங்களின் முதல்நாள் அட்வான்ஸ் புக்கிங் இதைவிட அதிகம் என சொல்லப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் பாகுபலி-2 இந்தியில் முதல்நாள் அட்வான்ஸ் புக்கிங்கில் செய்த சாதனையை கே ஜி எஃப் 2 முறியடித்து உள்ளதாக சில நம்பத்தக்க இடங்களிலிருந்து தகவல் வருகிறது.


Click it and Unblock the Notifications











