4 நாட்களில் ரூ.550 கோடி வசூல்... மிரட்டலான வசூலில் கேஜிஎப் 2 படம்

சென்னை : நடிகர் யஷ் நடிப்பில், பிரஷாந்த் நீல் இயக்கியுள்ள படம் கேஜிஎப் சாப்டர் 2. இந்தப் படத்தின் முதல் பாகம் ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்பை இரண்டாவது பாகமும் பூர்த்தி செய்து ரசிகர்களுக்கு மிரட்டலான அனுபவத்தை கொடுத்துள்ளது. ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

Recommended Video

Beast VS KGF 2 | Box Office Collection | Oneindia Tamil

நடிகர் யஷ்

நடிகர் யஷ்

நடிகர் யஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கியுள்ள படம் கேஜிஎப் 2. இந்தப் படத்தின் முதல் பாகம் சிறப்பான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது. ரசிகர்கள் கொண்டாடினர். இதையடுத்து கடந்த 14ம் தேதி சர்வதேச அளவில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகியுள்ளது.

5 மொழிகளில் ரிலீஸ்

5 மொழிகளில் ரிலீஸ்

இந்தப் படம் இந்திய அளவில் தமிழ், தெலுங்கு என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளது. இந்தியில் இந்தப் படம் மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்தியில் மட்டுமே அதிகமான கலெக்ஷனை கடந்த 4 நாட்களில் இந்தப் படம் எட்டியுள்ளது. இந்தியில் 180 கோடி ரூபாயை இந்தப் படம் கடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அம்மா -மகன் உறவு

அம்மா -மகன் உறவு

முன்னதாக படம் குறித்து பேசிய டைரக்டர் பிரஷாந்த் நீல், படம் இந்த அளவிற்கு ரசிகர்களை ஈர்க்கும், வரவேற்பை பெறும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் அம்மா மற்றும் மகனுக்கு இடையிலான உறவை வெளிப்படுத்த விரும்பியே இந்தப் படத்தை எடுத்ததாகவும் தெரிவித்திருந்தார்.

ரூ.550 கோடி வசூல்

ரூ.550 கோடி வசூல்

இந்நிலையில் இந்தப் படம் தற்போது சர்வதேச அளவில் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் கடந்த நான்கு நாட்களில் 550 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. கடந்த வார இறுதியில் உலகளவில் இந்த கலெக்ஷனை எட்டி உலகின் இரண்டாவது அதிக வசூலை எட்டிய படம் என்ற சாதனையை கேஜிஎப் 2 பெற்றுள்ளது.

உலகளவில் 2வது படம்

உலகளவில் 2வது படம்

இந்த வசூல் சாதனையில் முதல் படமாக சோனிக் தி ஹெட்ஜ்ஹாக் 2 என்ற படம் பெற்றுள்ளது. முதல் நாளில் ஏறக்குறைய 165 கோடி ரூபாயும் இரண்டாவது நாளில் 139 கோடி ரூபாயும் 3வது நாளில் 115 கோடி ரூபாயும் 4வது நாளான நேற்று 132 கோடி ரூபாயும் கேஜிஎப் 2 வசூலித்து மொத்தத்தில் 550 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

சஞ்சய் தத் வில்லன்

சஞ்சய் தத் வில்லன்

யஷ் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் சஞ்சய் தத் வில்லனாகவும் மேலும் ரவீனா டன்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, மாளவிகா, பிரகாஷ் ராஜ், ஜான் கொக்கன், சரண் உள்ளிட்டவர்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதனிடையே இந்தப் படத்தின் வெற்றிக்கு தயாரிப்பாளர் மற்றும் யஷ் ஆகியோருக்கு பிரஷாந்த் நீல் பாராட்டு தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X