Don't Miss!
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- News பல தொகுதிகளில் திணறல்.. வாக்குப்பதிவில் பெரிய அளவில் மக்கள் ஆர்வம் காட்டவில்லையா? 5 காரணங்கள்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
கேஜிஎஃப் சாப்டர் 2… ரிலீஸ் எப்போ தெரியுமா?... இணையத்தில் வைரலாகும் செய்தி !
சென்னை : கேஜிஎஃப் சாப்டர் 2 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
இதனால் கேஜிஎஃப் பாகம் இரண்டு திட்டமிட்டபடி திரையரங்கில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷின் நானே வருவேன் படப்பிடிப்பு எப்போ ஆரம்பம் தெரியுமா? செல்வராகவன் போட்ட மாஸ் ட்வீட்!
முதல் பாகத்தைப்போலவே இரண்டாம் பாகமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளன.
இமாலய வெற்றி
2008ம் ஆண்டு வெளியாகி இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் தான் கேஜிஎஃப். இப்படத்தில் யாஷ் ஒன்றை ஆளாக நின்று அனைவரின் கவனத்தையும் தன் வசப்படுத்தி இருப்பார். இப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் சும்மா மிரளவைத்து பல கைத்தட்டல்களை பெற்றன. இப்படி ஒரு படத்தை பார்த்ததே இல்லை என்று அனைவரையும் வாய் பிளக்க வைத்தது இந்த படம்.
விரைவில்
படம் தான் மாஸ் அண்டு கிளாஸ் என்றால் கருவினில் என்னை சுமந்து... வீரா வீரா... என்ற பாட்டு மிகப்பெரிய அளவில் ஹிட்டாகின. இப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை புரிந்ததை அடுத்து, கேஜிஎஃப்2 வில் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.
சாதனை படைத்தது
கேஜிஎஃப்2 படத்தின் டீசரை யாஷின் பிறந்த நாள் அன்று படக்குழு வெளியிட்டது. அந்த டீசரில் யாஷ் துப்பாக்கியில் சிக்ரெட் பற்றவைப்பது அல்டிமெட்டாக இருந்தது. டீசர் வெளியான சிறிது நேரத்திலேயே 78 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. இப்போது 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.
ரிலீஸ் தேதி அறிவிப்பு
கொரோனாவின் 2வது அலையால் தடைபட்டு இருந்த படத்தின் டப்பிங் பணிகள் கடந்த வாரம் முதல் தொடங்கின. இந்நிலையில், கேஜிஎஃப் சாப்டர் 2 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளதாக சமூகவலைத்தள பக்கத்தில் தகவல் ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதாவது செப்டம்பர் மாதம் 9ந் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் உற்சாகமாகி உள்ளனர். இருப்பினும் இந்த உறுதிப்படுத்தப்படவில்லை.