தமிழில் கால் பதிக்க திட்டம்.. மீண்டும் வரும் யஷ் .. கே.ஜி.எப்பிற்கு அடுத்து வெளியாகும் சூர்யவம்சி!
தென்னிந்தியாவில் திடீர் என்று வைரலாகி உள்ள கே.ஜி.எப் யஷ் நடிப்பில் இன்னொரு தமிழ் படம் தயாராகி வருகிறது.
சென்னை: தென்னிந்தியாவில் திடீர் என்று வைரலாகி உள்ள கே.ஜி.எப் யஷ் நடிப்பில் இன்னொரு தமிழ் படம் தயாராகி வருகிறது. இவரின் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சூர்யவம்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் கன்னடத்தில் உருவாகி, தமிழ் தெலுங்கு மட்டுமல்லாது இந்தியிலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் கேஜிஎப் சாப்டர் 1. கர்நாடாகாவில் இருந்து வெளியாகி தென்னிந்தியாவில் இவ்வளவு பெரிய ஹிட் கொடுத்த படம் என்றால் அது கேஜிஎப்தான்.
இந்த படத்தின் காட்சிகள் எல்லாம் வரவேற்பை பெற்று, பெரிய வைரலானது. இதன் இரண்டாம் பாகம் தற்போது பெரிய அளவில் தயாராகி வருகிறது.

யார் நடிக்கிறார்
இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் வில்லனாக சஞ்சய் தத் நடிக்கிறார். இந்தப்படம் மூலம் தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் ஒரு கதாநாயகன் ஆகிவிட்டார் நடிகர் யஷ். இந்த நிலையில் யஷ் நடிப்பில் தமிழில் உருவாகியுள்ள இந்த சூர்யவம்சி படம் வரும் நவம்பர் மாதம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

என்ன தயாரிப்பு
மஞ்சு சினிமாஸ் சார்பில் கே.மஞ்சு தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'சூர்யவம்சி'. பிரபல இயக்குனர் மகேஷ்ராவ் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக யஷ் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக ராதிகா பண்டிட் மற்றும் இன்னொரு மிக முக்கியமான ரோலில் நடிகர் ஷாம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

என்ன கதை
படத்தின் கதைப்படி துணிச்சலான இளைஞன் யஷ், தன் மனதை கவர்ந்த ராதிகாவை விரட்டி விரட்டி காதலிக்கிறார். ராதிகா யஷ்ஷை விரும்பினாலும் அதை வெளியே சொல்ல தயக்கம் காட்டுகிறார். ராதிகாவின் பெற்றோர்கள் தாங்கள் இறப்பதற்கு முன்பு தங்கள் உறவுக்கார பையன் ஷாமைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என சத்தியம் வாங்கி இருப்பது யஷ்ஷிற்கு தெரிய வருகிறது.

என்ன டிவிஸ்ட்
இங்குதான் கதையில் ஒரு டிவிஸ்ட் இருக்கிறது. ராதிகாவின் பெற்றோர்கள் தாங்கள் இறப்பதற்கு முன்பு தங்கள் உறவுக்கார பையன் ஷாமைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என சத்தியம் வாங்கி இருப்பது யஷ்ஷிற்கு தெரிய வருகிறது. ஷாம் ஒரு மிகப்பெரிய டான்.

எப்படி
அதேசமயம் ராதிகாவுக்காக தன்னை மாற்றிக்கொள்ள நினைப்பவர். இதன்பிறகு என்ன நடக்கிறது என்பதை காதல், காமெடி, ஆக்சன் என கமர்ஷியல் பார்முலா கலந்து படமாக்கி இருக்கிறார் இயக்குனர் மகேஷ்ராவ். இந்த படத்தில் தேவராஜ், சுமித்ரா, சீதா, அவினாஷ், ரவிஷங்கர் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











