ஒரே ஒரு கார் கசமுசா சீன்.. ஒட்டுமொத்த ஜன நாயகன், பராசக்தி யூடியூப் வியூஸை காலி செய்த டாக்சிக்

சென்னை: நடிகர் யஷ்ஷை வைத்து கீது மோகன்தாஸ் இயக்கியிருக்கும் திரைப்படம் டாக்சிக். இதில் நயன்தாரா, ருக்மிணி வசந்த் உள்ளிட்டோரும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார்கல். கேஜிஎஃப் வரிசை படங்கள் மெகா ஹிட்டடித்ததால் அதே மாதிரி இப்படமும் இருக்குமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பலமாகவே இருக்கிறது. நேற்று யஷ்ஷின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியானது குறிப்பிடத்தக்கது.

கன்னட திரையுலகின் சென்சேஷனல் ஸ்டாராக மாறியிருக்கிறார் யஷ். ஒரு வெற்றிக்கு காத்திருந்தபோது அவரை கண்டுகொள்ளாத பலரும் இப்போது அவரை வைத்து படம் எடுத்துவிட வேண்டும் என தங்களால் ஆன அத்தனை முயற்சிகளையும் செய்துவருகிறார்கள். ஆனால் யஷ்ஷுக்கு தேதிகள் கொடுக்க முடியவில்லை. அவரது கால்ஷீட் டைரி நிரம்பியிருப்பதாக கூறப்படுகிறது. இவ்வளவுக்கும் காரணம் கேஜிஎஃப் படத்தின் முதல் மற்றும் இரண்டாவது பாகம்.

Yash s Toxic Teaser Breaks Records Crosses 48 Million Views and Beats Parasakthi and Jana nayagan
Photo Credit:

கன்னட திரையுலகத்துக்கே வெளிச்சம்: கேஜிஎஃப் படத்தின் முதல் பாகமும், இரண்டாவது பாகமும் பெற்ற வெற்றி அளவிட முடியாதது. அந்த ஒரு படம் மட்டும் அதை அனுபவிக்கவில்லை. மாறாக ஒட்டுமொத்த கன்னட திரையுலகமும் பயனடைந்தது. ஏராளமான கன்னட படங்கள் தைரியமாக பல பல முயற்சிகளோடு வர தொடங்கின. இதனால் கன்னட திரையுலகத்தின் அடையாளங்களில் ஒன்றாக யஷ் நடித்த அந்த இரண்டு படங்களும் அமைந்துவிட்டன.

யஷ்ஷின் டாக்சிக்: அவர் இப்போது கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்சிக் படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் நயன்தாரா கங்கா கதாபாத்திரத்திலும், ருக்மிணி வசந்த் மெல்லீசா கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்புதான் அவர்களது கேரக்டருக்கான போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. அதில் இரண்டு பேரும் அசத்தில் லுக்கில் ஹாலிவுட் ரேஞ்சில் இருந்தார்கள். இரண்டு பேருக்கும் பெரிய ஸ்கோப் இந்தப் படத்தில் இருக்கும் என தெரிகிறது.

வெளியான டீசர்:சூழல் இப்படி இருக்க யஷ் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அதனையொட்டி ட்ரீட்டாக டாக்சிக் படத்தின் டீசரை வெளியிட்டது படக்குழு. காருக்குள் கசமுசா செய்தபடி எதிரிகளை ஹீரோ வீழ்த்துவதாக அந்த டீசரை டிசைன் செய்திருந்தார் இயக்குநர். இதுமாதிரி ஒரு வில்லங்கமான சீன்களோடு டீசர் வருவது இதுவே முதன்முறை. அது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றுவிட்டன. அதேசமயம் யஷ்ஷின் லுக்குகளை பார்த்து இவர் என்ன இன்னும் கேஜிஎஃப் உலகத்திலிருந்து வெளியே வரவில்லையா எனவும் கேள்விகளை முன்வைக்கிறார்கள்.

சம்பவம் செய்த டீசர்: அதுமட்டுமின்றி இப்படி மோசமான ஆபாசமாகத்தான் டீசரை டிசைன் செய்ய வேண்டுமா என சமூக ஆர்வலர்கள் கண்டன குரல்களை பதிவு செய்வதற்கும் தவறவில்லை. இந்நிலையில் டாக்சிக் படத்தின் டீசரை இதுவரை 48 மில்லியன் பேர் யூடியூபில் பார்த்திருக்கிறார்கள். முன்னதாக பராசக்தி படத்தின் ட்ரெய்லர் 48 மில்லியன் வியூஸ்களையும், ஜனநாயகன் 43 மில்லியன் வியூஸ்களையும் பெற்றிருந்தன. தற்போது டாக்சிக் டீசர் வியூஸ் இரண்டு படங்களையும் பின்னுக்கு தள்ளியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X