நீயே எனது பலம், பலவீனம்.. இணையத்தில் வைரலான கேஜிஎப் ஹீரோ வெளியிட்ட போட்டோ!

By

Recommended Video

இணையத்தில் வைரலான கேஜிஎப் ஹீரோ யாஷ் மகள் புகைப்படம்

பெங்களூர்: கேஜிஎப் பட ஹீரோ யாஷ் வெளியிட்ட அவர் மகள் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கன்னடப் படங்களில் நடித்து வந்த யாஷ், கேஜிஎப் படம் மூலம் தமிழுக்கும் வந்தார். பிரஷாந்த் நீல் இயக்கியிருந்த இந்தப் படத்தில் ஸ்ரீனிதி ஷெட்டி, ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உட்பட பலர் நடித்திருந்தனர்.

 Yash shares new picture on daughter’s first birthday is viral

தமிழில் இந்தப் படத்தை நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் வெளியிட்டார். படம் ஹிட்டானதை அடுத்து, கவனிக்கப்பட்டார். இந்தப் படம் வசூலிலும் சாதனை செய்தது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. இதில் யாஷூடன் பிரபல இந்தி ஹீரோ சஞ்சய் தத், அதிரா என்ற கேரக்டரில் நடிக்கிறார். மற்றும் ஸ்ரீனிதி ஷெட்டி, ரவீனா டாண்டன் உட்பட பலர் நடிக்கின்றனர். அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்நிலையில் நடிகர் யாஷ், தனது மகள் அய்ராவின் முதல் பிறந்த தினத்தை குடும்பத்தினருடன் கடந்த 2 ஆம் தேதி கொண்டாடினர். பின்னர் அய்ராவைத் தூக்கி, கன்னத்தில் முத்தமிடும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று வெளியிட்டார்.

 Yash shares new picture on daughter’s first birthday is viral

அதில் கேப்ஷனாக, உனக்கு தந்தையாக இருப்பது எனக்குள் மென்மை பக்கத்தை வெளி கொண்டு வந்துள்ளது. நீயே என் பலம், பலவீனம், எல்லாமும். வாழ்த்துக்கள் இளவரசி என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏராளமானோர் அய்ராவுக்கும் யாஷூக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் யாஷ், தன்னுடன் நடித்த நடிகை ராதிகா பண்டிட்டை காதலித்து 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்கள் முதல் குழந்தை அய்ரா, கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி பிறந்தார். இரண்டாவது ஆண்குழந்தை அக்டோபர் 30 ஆம் தேதி பிறந்தது.

More from Filmibeat

Read more about: yash radhika
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X