கேஜிஎஃப் ரிலீஸ் தேதி உறுதியானது.. ரெடியா ராக்கி பாய் அரைவல்!

சென்னை : நடிகர் யஷ் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக வெளியான கேஜிஎஃப் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது

கேஜிஎஃப் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு,கன்னடம்,மலையாளம் மற்றும் இந்தி என 5 மொழிகளிலும் வெளியாகிறது

கடந்த ஆண்டே ரிலீசாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம் கொரோனா பரவல் காரணமாக பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது இந்த நிலையில் கே ஜி எஃப் 2 ரிலீஸ் தேதியை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

திரும்பிப் பார்க்க வைத்தது

திரும்பிப் பார்க்க வைத்தது

கமர்சியல் சினிமாக்களுக்கு பெரிதும் பெயர்போன கன்னட சினிமாவில் மிகப் பிரம்மாண்ட படைப்பாக வெளியான திரைப்படம் கே ஜி எஃப் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தது என்று சொல்லலாம் அந்த அளவுக்கு இந்த படம் யஷ் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக இருக்கும். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப் 1 கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது. கன்னடத்தில் உருவான இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது தமிழில் நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மூலம் வெளியிட்டார்

கோலார் தங்கச் சுரங்கத்தை

கோலார் தங்கச் சுரங்கத்தை

பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இந்தப் படம் மிகப் பிரம்மாண்ட வெற்றி பெற்றதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் கேஜிஎஃப் இரண்டாவது பாகத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு உள்ளனர். இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் இந்த படம் கோலார் தங்கச் சுரங்கத்தை மையப்படுத்தி உருவாகி வருகிறது இதில் யஷ் கேங்ஸ்டராக நடித்து வருகிறார். மிகவும் வித்தியாசமான படைப்பு யஷின் ஸ்டைலான நடிப்பு என ஒவ்வொரு காட்சியிலும் பிரமிப்பை ஏற்படுத்திய கே ஜி எஃப் இரண்டாவது பாகத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஆதிரா என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடிக்கிறார். மேலும் ரவீனா டண்டன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு

ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு

யஷ் பிறந்தநாளுக்கு கே ஜி எஃப் 2 டீசர் வெளியாகி பட்டையை கிளப்பியது. இந்த நிலையில் கே ஜி எஃப் 2 படத்தை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர். கடந்த வருடமே கே ஜி எஃப் 2 வெளியாகும் என படக்குழு பல்வேறு தேதிகளை அறிவித்தது ஆனால் கொரோனா பரவல் காரணமாக தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டது.

புதிய போஸ்டருடன் உறுதியானது

புதிய போஸ்டருடன் உறுதியானது

இந்த நிலையில் இறுதியாக ஏப்ரல் 14ஆம் தேதி கே ஜி எஃப் 2 வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக இப்பொழுது புதிய போஸ்டரையும் வெளியிட்டு கேஜிஎஃப் 2 ஏப்ரல் 14ஆம் தேதியை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X