இப்படி ஒரு புருஷன் கிடைக்காதா?: விஷால் தம்பியை பார்த்து ஏங்கும் ரசிகைகள்
Recommended Video
பெங்களூர்: நடிகர் யஷ் செய்யும் காரியங்களை பார்க்கும் ரசிகைகள் இப்படி ஒரு கணவர் கிடைக்காதா என்று ஏங்குகிறார்கள்.
கே.ஜி.எஃப். படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்டார் கன்னட நடிகரான யஷ். அவரின் மனைவியும், நடிகையுமான ராதிகா பண்டிட் இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார்.
ராதிகா கடந்த டிசம்பர் மாதம் தான் அய்ரா என்கிற பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

மீண்டும் கர்ப்பம்
முதல் குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே ராதிகா மீண்டும் கர்ப்பமாகியுள்ளார். தான் மீண்டும் தந்தையாகப் போவதை சமூக வலைதளத்தில் வித்தியாசமான வீடியோ வெளியிட்டு அறிவித்தார் யஷ். அந்த வீடியோவை பார்த்தவர்கள் நீங்கள் எல்லாம் படித்தவர்கள் தானா, ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் இடையே குறைந்தது ஒன்றரை ஆண்டுகள் இடைவெளி விட வேண்டும் என்பது கூட தெரியாதா என யஷ் மற்றும் ராதிகாவை விளாசினார்கள்.

ராதிகா
தான் முதல் குழந்தையை பெற்ற உடனேயே மீண்டும் கர்ப்பமாகியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக ராதிகா பண்டிட் தெரிவித்துள்ளார். மேலும் இது கடவுளின் அருள் என்றும் கூறியுள்ளார். கடவுளின் அருள் எல்லாம் இருக்கட்டும் இப்படி ஆண்டுக்கு ஒரு குழந்தை பெற்றால் உங்களின் உடல்நலம் என்னவாகும் என்று யோசித்து பாருங்கள். இரண்டாவது குழந்தை பிறந்த கையோடு மீண்டும் கர்ப்பமாகாமல் இருந்தால் சரி என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

யஷ்
வீட்டில் ஒரு கைக்குழந்தை இருக்கும் நிலையில் மீண்டும் கர்ப்பமான ராதிகாவை யஷ் மிகவும் பாசமாக பார்த்துக் கொள்கிறார். தான் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் ராதிகாவையும் அழைத்துச் செல்கிறார். அவர் தனது மனைவியை கவனித்துக் கொள்ளும் விதம் ரசிகைகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஆசை
கர்ப்பம் என்பது ஒரு நோய் அல்ல அது ஒரு நல்ல விஷயம். கர்ப்பமாக இருக்கும் பெண்ணை வீட்டில் அடைத்து வைக்கத் தேவையில்லை. சொல்லப் போனால் இந்த நேரத்தில் தான் அவரை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவர் ஆசைப்படுவதை எல்லாம் செய்து கொடுக்க வேண்டும். நான் என் மனைவியை வீட்டிலேயே இரு என்று சொல்லவே மாட்டேன் என யஷ் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications