100 நாளில் வரேன்.. டாக்ஸிக் படத்திலேயே இப்படி இருக்காரே யஷ்.. ராவணனாக எப்படி மிரட்டப்போறாரோ!

பெங்களூர்: கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடித்துள்ள டாக்ஸிக் திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் நிலையில், அந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் என்றெல்லாம் கிசுகிசுக்கள் கிளம்பின. ஆனால், தொடர்ந்து நடிகர் யஷ் மற்றும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் இன்னும் 100 நாட்களில் படம் சொன்ன தேதியில் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

பாத் டப்பில் முதுகில் டாட்டூக்களுடன் ராயல் லுக்கில் யஷ் இருக்கும் புதிய போஸ்டர் தற்போது வெளியாகி இன்னும் 100 நாட்களில் டாக்ஸிக் வெளியாகும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

Yash unveils Toxic new posters and announced the movie will arrive exactly in 100 days
Photo Credit:

டாக்ஸிக் படத்திலேயே யஷ் இப்படி இருக்கிறாரே என்றும் ராமாயணம் படத்தில் ராவணனாக அவர் எப்படி மிரட்டப்போகிறாரோ என ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

100 நாட்களில் டாக்ஸிக்: கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ், கியாரா அத்வானி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது டாக்ஸிக் திரைப்படம். தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தை தயாரித்து வரும் கேவிஎன் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரித்து வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ஜன நாயகன் படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், மார்ச் மாதம் 19ம் தேதி திட்டமிட்டப்படி டாக்ஸிக் வெளியாகும் என புதிய போஸ்டருடன் யஷ் அறிவித்துள்ளார்.

பேக் போஸே மிரட்டுது: பில்லா அஜித்துக்குப் பிறகு இப்படியொரு பேக் போஸே சும்மா மிரட்டுதே என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கேஜிஎஃப் 1 மற்றும் 2 பாகங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், கன்னட திரையுலகத்தை ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் பார்க்கத் தொடங்கியது. கேஜிஎஃப் 2வுக்குப் பிறகு யஷ் நடித்த எந்தவொரு படமும் வெளியாகவில்லையே என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்க டாக்ஸிக், ராமாயணம் என அடுத்த ஆண்டு அடுத்தடுத்து 2 பிரமாண்ட படங்களை கொடுக்க காத்திருக்கிறார்.

ராவணனாக எப்படி இருக்கப்போறாரோ: கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் டாக்ஸிக் படத்திலேயே இப்படி இருக்கிறாரே யஷ், இன்னும் ரன்பீர் கபூரின் ராமாயணம் படத்தில் ராவணனாக அவரது ஃபர்ஸ்ட் லுக் எப்படி இருக்கப் போகிறதோ என ரசிகர்கள் பிரம்மித்துப் போயுள்ளனர். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் டாக்ஸிக் வெளியாகவுள்ள நிலையில், தீபாவளிக்கு ராமாயணம் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X