நிரூப்புடன் திருமணம் எப்போது? ரசிகர் கேட்ட கேள்விக்கு பிக் பாஸ் பிரபலம் சொன்ன பதிலை பாருங்க!

சென்னை: பிக் பாஸ் சீசன் 5 மற்றும் அல்டிமேட் என தொடர்ந்து பிக் பாஸ் போட்டியாளராக கலக்கிக் கொண்டிருக்கிறார் நிரூப்.

Recommended Video

Yashika WILDCARD Entry in Bigg Boss Ultimate | உண்மை உடைத்த Vanitha, Abhi Vs Niroop Vs Yashika

இரண்டாவது சீசன் போட்டியாளரான யாஷிகா ஆனந்த் மற்றும் மூன்றாவது மற்றும் பிக் பாஸ் அல்டிமேட் போட்டியாளரான அபிராமி என இருவருமே நிரூப்பின் எக்ஸ் லவ்வர்கள் தான்.

இந்நிலையில், நடிகை யாஷிகா ஆனந்திடம் நிரூப்புடன் திருமணம் எப்போது? என ரசிகர் ஒருவர் கேட்க அதற்கு அவர் அளித்துள்ள பதில் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

மீண்டும் கவர்ச்சியாட்டம்

மீண்டும் கவர்ச்சியாட்டம்

கார் விபத்தில் சிக்கி காலில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், 3 மாதங்களுக்கு மேல் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த யாஷிகா ஆனந்த் தற்போது முழுமையாக குணமடைந்துள்ளார். பழையபடி தனது கவர்ச்சி போட்டோஷூட் வேலைகளையும் படப்பிடிப்பு பணிகளையும் ஆரம்பித்துள்ளார்.

யாஷிகா என் எக்ஸ் லவ்வர்

யாஷிகா என் எக்ஸ் லவ்வர்

பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்ட நிரூப் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட கதை சொல்லட்டுமா டாஸ்க்கில் தான் யாஷிகா ஆனந்தின் எக்ஸ் லவ்வர் என்றும் அவரால் தான் பிக் பாஸ் மேடை வரை தன்னால் வர முடிந்தது என்றும் கூறி ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்கள் மற்றும் ரசிகர்கள் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.

நிரூப்பை பார்க்க வந்த யாஷிகா

நிரூப்பை பார்க்க வந்த யாஷிகா

அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஃப்ரீஸ் டாஸ்க்கின் போது ஒவ்வொரு குடும்பமாக உள்ளே வந்து போட்டியாளர்களை சந்தித்து சென்ற நிலையில், நடிகையும் முன்னாள் பிக் பாஸ் பிரபலமுமான யாஷிகா ஆனந்த் நிரூப்பை சந்திப்பதற்காகவே உள்ளே வந்திருந்தது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

அபிராமியும் முன்னாள் காதலி

அபிராமியும் முன்னாள் காதலி

இது ஒரு பக்கம் இருக்க பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டிருக்கும் அபிராமியும் தன்னுடைய முன்னாள் காதலி என நிரூப்பும், உங்க எக்ஸ் லவ்வர் பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டதை எப்படி பார்க்குறீங்க என அபிராமியே நிரூப்புடன் கேட்டதும் சுஜா, தாமரை உள்ளிட்ட போட்டியாளர்களையும் ஆடியன்ஸையும் ஷாக் ஆக்கியது.

நிரூப்புடன் திருமணம் எப்போ

நிரூப்புடன் திருமணம் எப்போ

இந்நிலையில், தற்போது நிரூப்புடன் எப்போது திருமணம் என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நடிகை யாஷிகா ஆனந்த், நாங்கள் இருவரும் சில மாதங்களுக்கு முன்னதாக பிரேக்கப் செய்து விட்டோம். கடைசி வரை நல்ல நண்பர்களாக இருப்போம். இப்போதைக்கு யாரையும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என யாஷிகா ஆனந்த் பதில் அளித்துள்ளார்.

அபிராமியும் நிரூப்பும் பழகுவது பற்றி

அபிராமியும் நிரூப்பும் பழகுவது பற்றி

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் நிரூப் மற்றும் அவரது முன்னாள் காதலியான அபிராமி இருவரும் சந்தித்து பேசி பழகி வருவதை நீங்க எப்படி பார்க்குறீங்க? என்கிற கேள்வியையும் ரசிகர் ஒருவர் முன் வைக்க, இருவரும் மெச்சூர் ஆனவர்கள், அவர்கள் சந்தித்து பேசிக் கொள்வதில் எனக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை. மேலும், அவர்களை பற்றி கமெண்ட் செய்ய நான் யார், வாழுங்கள் வாழ விடுங்கள் என பெரிய கும்பிடு போட்டுள்ளார் யாஷிகா ஆனந்த்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X