புது வீடு வாங்கிய நடிகை யாஷிகா ஆனந்த்.. கஷ்டப்பட்டு சம்பாதித்தது என இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சி!

சென்னை: கார் விபத்துக்கு பிறகு கடந்த 3 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை யாஷிகா ஆனந்த் தனது நீண்ட நாள் கனவை நனவாக்கி உள்ளார்.

கவர்ச்சி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த ஜூலை மாதம் கார் விபத்தில் சிக்கியதில் படுகாயமடைந்தார்.

அந்த விபத்தில் அவருடைய தோழி வள்ளி செட்டி பாவனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை அளித்தது.

வாழ்க்கையை மாற்றிய விபத்து

வாழ்க்கையை மாற்றிய விபத்து

தமிழ் சினிமாவில் கிளாமர் ரோல்களில் கலக்கி வந்த நடிகை யாஷிகா ஆனந்த் கதையம்சம் கொண்ட படங்களில் அடுத்தடுத்து கமீட் ஆகி நல்ல நடிகை என்கிற அந்தஸ்த்தை அடைய கடும் முயற்சி செய்து வந்த நிலையில், அவருடைய வாழ்க்கையையே புரட்டிப் போடும் அளவுக்கு அந்த கோர விபத்து கடந்த ஜூலை மாதம் மகாபலிபுரம் அருகே நடந்தது.

தோழியின் மரணம்

தோழியின் மரணம்

பாண்டிச்சேரியில் டின்னர் முடித்து விட்டு தனது நண்பர்களுடன் ஈசிஆர் வழியாக கார் ஓட்டிக் கொண்டு வந்த யாஷிகா ஆனந்த் எதிர்பாராத விதமாக சென்டர் மீடியனில் மோதியதில் அந்த படு மோசமான விபத்து நிகழ்ந்தது. அதில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்தார். அவரது தோழி வள்ளி செட்டி பாவனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த செய்தி அறிந்த யாஷிகா மிகவும் மன வேதனை அடைந்தார்.

3 மாதங்களுக்கு பிறகு

3 மாதங்களுக்கு பிறகு

காலில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக கடந்த 3 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த்தால் இன்னமும் சரிவர நடக்க முடியவில்லை. மருத்துவமனையில் இருந்து சமீபத்தில் தான் நடைபயிற்சி எல்லாம் மேற்கொண்டு வீடு திரும்பி உள்ளார் யாஷிகா ஆனந்த்.

நீண்ட நாள் கனவு

நீண்ட நாள் கனவு

இந்நிலையில், நடிகை யாஷிகா ஆனந்த் தனது நீண்ட நாள் கனவான புது வீட்டை வாங்கும் கனவை தற்போது நனவாக்கி உள்ளார். புது வீட்டிற்கு கிரக பிரவேஷம் செய்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.

யாஷிகாவின் தங்கை

யாஷிகாவின் தங்கை

அந்த புது வீட்டுக்கு பூஜை போடும் வீடியோவில் கவர்ச்சியான உடையணிந்து அமர்ந்திருப்பது யார் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நடிகை யாஷிகாவின் தங்கை ஒசைன் ஆனந்த் தான் அவர் என்றும் இன்ஸ்டாகிராமில் தற்போது அக்காவுக்கு பதிலாக ஒசைன் கலக்கி வருகிறார் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X