என்னது யாஷிகாவிற்கு இத்தனை சர்ஜரியா... தங்கை வெளியிட்ட ஹெல்த் அப்டேட்

சென்னை : பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் சிறிய ரோல்களில் நடித்து வந்த யாஷிகா ஆனந்த், தற்போது எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக 'கடமையை செய்' படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

Recommended Video

Yashika தோழி மறைவிற்கு யார் காரணம் | முதல் Surgery முடிந்தது Live Update

இந்நிலையில் ஜுலை 24 ம் தேதி நண்பர்கள் சிலருடன் மாமல்லபுரத்தில் பார்ட்டி கொண்டாடி விட்டு சென்னை திரும்பிய யாஷிகாவின் கார், ஈசிஆரில் இரவு 11.30 மணிக்கு விபத்திற்குள்ளானது. இதில் யாஷிகா மற்றும் நண்பர்கள் மோசமாக காயமடைந்தனர். யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பல இடங்களில் எலும்பு முறிவு

பல இடங்களில் எலும்பு முறிவு

மாமல்லபுரத்தில் முதலுதவி அளிக்கப்பட்ட பிறகு, மேல் சிகிச்சைக்காக யாஷிகா மற்றும் 2 நண்பர்கள் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். யாஷிகாவிற்கு பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

அப்டேட் தந்த யாஷிகாவின் தங்கை

அப்டேட் தந்த யாஷிகாவின் தங்கை

இந்நிலையில் யாஷிகாவின் உடல்நிலை குறித்து அவரின் தங்கை ஓஷீன் ஆனந்த் ட்விட்டரில் அப்டேட் வெளியிட்டுள்ளார். அதில், யாஷிகா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. யாஷிகாவிற்கு நேற்று மேலும் ஒரு சர்ஜரி முடிந்தது. கடவுள் அருளால் சர்ஜரி வெற்றிகரமாக முடிந்தது.

எத்தனை சர்ஜரிகள் நடக்கிறது

எத்தனை சர்ஜரிகள் நடக்கிறது

தற்போது ஐசியு.,வில் சிகிச்சை பெற்று வரும் யாஷிகா, சுயநினைவுடன் உள்ளார். பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அடுத்த சில நாட்களில் அடுத்தடுத்த சர்ஜரிகள் நடக்க உள்ளது. அவருக்காக தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

கவலையில் ரசிகர்கள்

கவலையில் ரசிகர்கள்

யாஷிகாவிற்கு இதுவரை எத்தனை சர்ஜரிகள் நடைபெற்றுள்ளது, இன்னும் எத்தனை சர்ஜரி நடைபெற உள்ளது என்பது போன்ற தகவல்களை அவர் வெளியிடவில்லை. இருந்தும் யாஷிகா தொடர்ந்து ஐசியு.,விலேயே இருந்து வருவதாக கூறப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.

வாழ்த்தும் பிரபலங்கள்

வாழ்த்தும் பிரபலங்கள்

யாஷிகா விரைவில் குணமடைய ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் சமூக வலைதளங்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஏற்கனவே எஸ்.ஜே.சூர்யாவும் யாஷிகா குணமடைய வாழ்த்து கூறி இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X