ஈரான் காமெனி உயிரிழந்ததை கொண்டாடிய யாஷிகா.. நடுவிரலை காட்டி சொன்ன விஷயம்!

சென்னை: ஈரான் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடுவதாகக் குற்றம்சாட்டி அமெரிக்கா - இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில், ஈரான் உச்ச தலைவரான அயத்துல்லா அலி காமெனி உயிரிழந்தார். ஈரானின் பாதுகாப்பு அமைச்சர், ராணுவத் தளபதி உட்பட 40 க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அந்த செயலை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், சீனா உள்ளிட்ட பல உலக நாடுகள் வன்மையாகக் கண்டித்து வருகின்றனர்.

இதனால், உலக நாடுகள் இடையே பதற்றம் அதிகரித்து இருக்கும் நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த், ஈரான் தலைவர் காமெனி உயிரிழந்ததை கொண்டாடும் வகையில், அவரின் புகைப்படத்தை பந்தால் எட்டி உதைப்பது போல வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.இதை பாராட்டிய இணைவாசி ஒருவர், மதம் மாற்றியவர்கள் அழுகிறார்கள், இந்த ஜோக்கர்கள் ஒருபோதும் ஈரானுக்கு போய் அவர்களுக்காக போராட மாட்டார்கள் . இதைப்பற்றி பேசவோ, ஸ்டோரி போடவோ சில பிரபலங்கள் முன்வருகிறார்கள். உங்களை நான் மிகவும் பாராட்டுகிறேன். நீங்கள் ஒரு உண்மையான இந்தியர் என பதிவிட்டு பாராட்டி உள்ளார். சிலர், இது சர்வதேச சட்ட விதிமீறல், மனித நேயமற்ற படுகொலை இதை ஆதரிப்பதாக என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Yashika Aannand instagram
Photo Credit:

யாஷிகா ஆனந்த்: யாஷிகாவிற்கு இணையத்தில் தொடர்ந்து எதிர்ப்பு வந்து கொண்டு இருப்பதால், அதற்கு பதிலளித்துள்ள யாஷிகா, ஒருவர் மனித உரிமைகளின் எதிரியாக இருந்தவராக இருந்தும், அவருக்காக மக்கள் ஏன் இவ்வளவு கண்ணீர் சிந்துகின்றார்கள் என்று எனக்கு புரியவில்லை. முதலில், அவர்களின் முன்னோர்கள் அழகான பெர்ஷியா நாட்டை காலனித்துவப்படுத்தி அழித்தனர்; அப்போது அந்த நாடு நல்ல நிலையில் இருந்தது, மக்கள் ஏற்கனவே நவீன முறையில் முன்னேறிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தனர். 70களில் காமேனி ஆட்சிக்கு வந்து, குறிப்பாக பெண்களின் உரிமைகளில் பாதிப்பை ஏற்படுத்தினார். சிறுமிகளின் திருமண வயதை 13 ஆகக் குறைத்த இந்த மனிதருக்கு எதிராக உலகம் ஏன் பேசவில்லை? அவர் பெண்களை ஒடுக்கியவர். அந்த நிலத்தின் உரிமையாளர்களாக இருந்த பெர்ஷியர்களின் உரிமைகளை பறித்தவர் என பதிவிட்டுள்ளார். மேலும், நடுவிரலை காட்டி நீங்கள் என்னை வெறுத்தாலும் எனக்கு கவலை இல்லை என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X