அம்மாடியோவ்.. விமானத்தில் இருந்து குதித்த பிக் பாஸ் பிரபலம்.. ஆகாயத்தில் எப்படி பறக்குறாரு பாருங்க!

சென்னை: நடிகையும் பிக் பாஸ் பிரபலமுமான யாஷிகா ஆனந்த் விமானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

Recommended Video

நடிப்பை யாரும் கற்று கொடுக்கமுடியாது | MISIC DIRECTOR SIDDHARTH VIPIN TALK | FILMIBEAT TAMIL

கவர்ச்சி கன்னியாக வலம் வந்த யாஷிகா ஆனந்த், அடுத்ததாக ஆக்‌ஷன் அவதாரம் எடுத்துள்ளார்.

துபாயில் சுற்றுலா செய்து வரும் யாஷிகா ஆனந்த் ஸ்கை டைவிங் செய்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

வேற லெவல் கிளாமர்

வேற லெவல் கிளாமர்

கோலிவுட் ரசிகர்களை தனது வேற லெவல் கிளாமரால் திகைக்க வைத்து வருகிறார் யாஷிகா ஆனந்த். வித விதமாக போட்டோஷூட்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்குகளை குவித்து வரும் இவர், தற்போது கவர்ச்சியில் இருந்து அதிரடி ஆக்‌ஷனுக்கு தனது ரூட்டை மாற்றி உள்ளார்.

போலீஸ் அதிகாரியாக

போலீஸ் அதிகாரியாக

கடந்த ஆண்டு போடப்பட்ட லாக்டவுனில் தனது உடல் எடையை மொத்தமாக குறைத்து ஒல்லி பெல்லி தோற்றத்திற்கு வந்த நடிகை யாஷிகா ஆனந்த், தற்போது சல்பர் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக காக்கி சட்டை போட்டு கெத்து காட்டி வருகிறார். மேலும், எஸ்.ஜே. சூர்யாவின் கடமை செய் படத்திலும் நடித்து வருகிறார்.

துபாய் டூர்

ஏகப்பட்ட நடிகைகள் மாலத்தீவை நோக்கி படையெடுத்து வரும் நிலையில், நடிகை யாஷிகா ஆனந்த் துபாயில் சாகச சுற்றுலா செய்து வருகிறார். துபாய் ஹோட்டல் ஒன்றில் அவரது பெயர் போட்ட ரொட்டியை செஃப் ஒருவர் செய்து அசத்தும் வீடியோவையும் சமீபத்தில் பதிவிட்டு வைரலாக்கி இருந்தார் யாஷிகா ஆனந்த்.

ஆகாயத்தில் பறந்தபடியே

பயம் என்பதே கொஞ்சமும் யாஷிகா ஆனந்துக்கு இல்லை என்றே சொல்லலாம். அதே போல சாகசங்களை செய்ய சிறிதும் தயங்குவதில்லை. எக்ஸ் லைன் எனப்படும் கேபிள் மூலம் துபாயில் அந்தரத்தில் பறந்தபடியே செல்லும் மயிற்கூச்செரியும் சாகச வீடியோவை அண்மையில் பதிவிட்டு ரசிகர்களை கதி கலங்க செய்திருந்தார்.

விமானத்தில் இருந்து குதித்து

இந்நிலையில், அதை விட பல படி மேலே சென்று விமானத்தில் இருந்து குதித்து ஸ்கை டைவிங் செய்யும் சாகசத்திலும் நடிகை யாஷிகா ஆனந்த் ஈடுபட்டுள்ளார். தற்போது அதன் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் வாய் பிளக்க வைத்துள்ளார் யாஷிகா ஆனந்த். கவர்ச்சி மட்டுமில்லை சாகசமும் சாத்தியம் என்பதை பலருக்கும் புரிய வைத்துள்ளார் யாஷிகா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X