’ஹாட்’னஸின் அடுத்த கட்டம்.. இளைஞர்களை துரத்தும் கவர்ச்சி ஜாம்பி.. டிரெண்டாகும் #HBDYashikaAannand
சென்னை: மாளவிகா மோகனனுக்கு மட்டும் இல்லை நம்ம கவர்ச்சி புயல் யாஷிகா ஆனந்துக்கும் இன்று தான் பிறந்தநாள்.
Recommended Video
துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்டு, தனது கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடித்தவர் யாஷிகா ஆனந்த்.

14 வயசுலயே
இன்று தனது 21வது பிறந்தநாளை கொண்டாடும் கோலிவுட்டின் ஹாட் பியூட்டி யாஷிகா ஆனந்த், தனது 14வது வயதிலேயே, நடிகர் சந்தானத்தின் இனிமே இப்படித்தான் படத்தில் ஒரு காட்சியில் நடிக்க ஒப்பந்தமானார். சில காட்சிகளில் நடித்து இருந்த இவர், ஒரு பாடல் ஷூட்டுக்கு வராததால், படத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

நல்ல ஓப்பனிங்
அடுத்து, 2015ம் ஆண்டில் வெளியான ஜீவாவின் கவலை வேண்டாம் படத்தில் நீச்சல் குள பயிற்சியாளராக ஒரு சின்ன ரோலில் நடித்திருந்தார் யாஷிகா ஆனந்த். மாடலிங் துறையில் கலக்கி வந்த இவர், அதன் பின்னர், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான துருவங்கள் பதினாறு படத்தில் ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

ஹாட்னஸின் அடுத்த கட்டம்
அடல்ட் காமெடி படமாக வெளியாகி தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்து வசூல் ரீதியாக வெற்றியும் பெற்ற படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. அந்த படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்து இருந்த யாஷிகா, பேசும் டபுள் மீனிங் வசனங்கள் அவரை கோலிவுட் ரசிகர்களின் திடீர் கனவுக் கன்னி லிஸ்டில் உடனடியாக சேர்த்து விட்டது.

குவியும் வாழ்த்துக்கள்
2016 முதல் 2020 வரை கிட்டத்தட்ட 5 ஆண்டு காலமாக தமிழ் ரசிகர்களின் இளம் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்து வரும் யாஷிகா ஆனந்தின் பிறந்தநாளை முன்னிட்டு #HBDYashikaAannand என்ற ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு இணையத்தை கலர்ஃபுல் ஆக்கி உள்ளனர்.

மாளவிகா மோகனன் vs யாஷிகா ஆனந்த்
இன்று பிறந்தநாளை கொண்டாடும் மாஸ்டர் நாயகி மற்றும் ஜாம்பி ஹீரோயின் இவர்கள் இருவரில் யார் செம ஹாட் என்ற போட்டியையும் இணையத்தில் ரசிகர்கள் நடத்தி கவர்ச்சி விருந்து கொடுத்து வருகின்றனர். இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல், கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருவதால், இருவருமே ஹாட் தான் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.


Click it and Unblock the Notifications