ஆத்தி.. விபத்துக்கு பிறகு மீண்டும் ஜிம்முக்கு போன யாஷிகா ஆனந்த்.. என்னம்மா வொர்க்கவுட் பண்றாரு!
சென்னை: கிழக்கு கடற்கரை சாலையில் இரவு டின்னர் முடித்து விட்டு நண்பர்களுடன் காரில் வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து டிவைடரில் கார் மோதிய விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்தின் தோழி வள்ளிச்செட்டி பவனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் கார் விபத்துக்குள்ளான நிலையில், காரை ஓட்டிச் சென்ற யாஷிகா ஆனந்துக்கும் காலில் பயங்கர அடி விழுந்தது.
சுமார் 3 மாதங்கள் விபத்துக் காரணமாக தையல்கள் எல்லாம் போட்டுக் கொண்டு வீட்டில் ஓய்வெடுத்து வந்த யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நிரூப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக உள்ளே வந்து சென்றார்.

அதன் பின்னர் சமூக வலைதளங்களில் பழையபடியே கவர்ச்சி பொங்க போட்டோக்களை வெளியிட்டு வரும் யாஷிகா ஆனந்த் தற்போது மீண்டும் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு தனது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.
மீண்டும் ஜிம்முக்கு போன யாஷிகா: இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி, நோட்டா, பஹீரா, தி லெஜண்ட் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த யாஷிகா ஆனந்த் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஜிம்முக்கு செல்லாமல் இருந்து வந்தார். உடல் எடையை கணிசமாக குறைத்து வந்த நிலையில், விபத்து ஏற்பட அதன் பின்னர் மீண்டும் பருமனாகி விட்டார் யாஷிகா ஆனந்த்.
இந்நிலையில், பழையபடி தனது உடல் எடையை குறைக்க மீண்டும் ஜிம்முக்கு சென்ற நிலையில், அங்கே வொர்க்கவுட் செய்யும் வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பார்த்து பண்ணுங்க யாஷிகா: பிக் பாஸ் பிரபலம் யாஷிகா மீண்டும் கடினமாக வொர்க்கவுட் செய்வதை பார்த்த ரசிகர்கள், பார்த்து பத்திரமா பண்ணுங்க யாஷிகா அக்கா உங்களுக்கு ஒண்ணும் ஆகக் கூடாது என கமெண்ட் போட்டு வருகின்றனர்.
மீண்டும் ஸ்லிம் பியூட்டியாக மாறி மாஸ் காட்டப் போகிறார் யாஷிகா ஆனந்த் என ரசிகர்கள் கமெண்ட் செக்ஷனில் ஏகப்பட்ட வாழ்த்து மெசேஜ்களை போட்டு தங்கள் அன்பை வெளிக்காட்டி வருகின்றனர்.
அதுக்கு பஞ்சமே இல்லை: சமீபத்தில் யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட கண்குளிர் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் மீண்டும் யாஷிகாவின் இன்ஸ்டா பக்கம் வண்டு போல வட்டமிட ஆரம்பித்துள்ளனர்.
கிளாமருக்கு கொஞ்சம் கூட குறைவு வைக்காமல் தாராளமாக முன்பை போலவே போஸ்ட்டுகளை போட்டு வருகிறார் யாஷிகா ஆனந்த்.


Click it and Unblock the Notifications











