நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்துல இவங்களும் இருக்காங்களா.. யாஷிகா வெளியிட்ட புதிய புகைப்படம்!

சென்னை: மூக்குத்தி அம்மன் படத்தில் தனது போர்ஷன் முடிந்துள்ளதாக நடிகை யாஷிகா ஆனந்த் புதிய படம் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

ஆர்.ஜே. பாலாஜி நடித்து இயக்கும் படம் மூக்குத்தி அம்மன். லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இந்த படத்தில் லீடு ரோலில் நடித்துள்ளார்.

Recommended Video

யாஷிகா ஆனந்த் New Workout - வீடியோ

எல்.கே.ஜி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் மூக்குத்தி அம்மன் படத்தை தயாரித்து வருகிறது.

இவங்களும் இருக்காங்களா

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தில் நடிகை யாஷிகா ஆனந்தும் முக்கிய ரோலில் நடித்துள்ளது, தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தின் மூலமாக தெரிய வந்துள்ளது. மேலும், மூக்குத்தி அம்மன் படத்தில் தனது போர்ஷன் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். யாஷிகா வெளியிட்ட புகைப்படத்திற்கு லைக்ஸ் அள்ளுகிறது.

கெளதம் கார்த்திக்

கெளதம் கார்த்திக்

மேலும், அந்த புகைப்படத்தில் மற்றொரு ஸ்பெஷலும் இருக்கிறது. நடிகர் கெளதம் கார்த்திக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து வருகிற தகவலும் வெளியாகி உள்ளது. யாஷிகா ஆனந்த் மூக்குத்தி அம்மன் பட செட்டில் இருந்து கெளதம் கார்த்திக் மற்றும் ஆர்.ஜே. பாலாஜியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

நயன்தாரா மிஸ்ஸிங்

நயன்தாரா மிஸ்ஸிங்

ஆனால், மூக்குத்தி அம்மன் படத்தின் நாயகியான நயன்தாரா அந்த புகைப்படத்தில் இல்லை. நயன்தாராவுடன் செல்ஃபி எடுத்திருந்தால், அதையும் ஷேர் பண்ணுங்க என யாஷிகா ஆனந்த் ரசிகர்கள் கீழே கமெண்ட்டில் அவருக்கு தொடர்ந்து கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். விரைவில் மூக்குத்தி அம்மன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரிசை கட்டி

வரிசை கட்டி

துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்த யாஷிகா ஆனந்த், பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்டார். அதன் பிறகு, கடந்த ஆண்டு ஜாம்பி எனும் காமெடி பேய் படத்தில் நடித்திருந்தார். இந்த ஆண்டு யாஷிகா நடிப்பில், ராஜபீமா, இவன் தான் உத்தமன் மற்றும் மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு வரிசை கட்டி நிற்கின்றன.

செம்ம கிளாஷ்

செம்ம கிளாஷ்

மூக்குத்தி அம்மன் படத்தின் ஷூட்டிங் நிறைவடைய உள்ள நிலையில், வரும் ஏப்ரல் மாதமே இந்த படமும் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஏப்ரலில் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சூர்யாவின் சூரரைப் போற்று, விக்ரமின் கோப்ரா படங்கள் மோத உள்ள நிலையில், மூக்குத்தி அம்மனும் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X