பாலாஜி முருகதாஸ் உடன் என்ன உறவு.. முதல் முறையாக மனம் திறந்த யாஷிகா ஆனந்த்.. அப்போ அந்த டாட்டூ?

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் சர்ச்சை போட்டியாளர் பாலாஜி முருகதாஸ் குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 2ல் போட்டியாளராக யாஷிகா ஆனந்த் கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், யாஷிகா ஆனந்தின் பதில் பிக் பாஸ் ரசிகர்களை பரபரப்பு அடைய செய்துள்ளது.

சர்ச்சை நாயகன்

சர்ச்சை நாயகன்

சனம் ஷெட்டியுடன் ‘அட்ஜெஸ்ட்மென்ட்' சண்டை, ஏகப்பட்ட கெட்ட வார்த்தை பிரயோகம், ரூல்ஸ் மீறுவது, ஷிவானியுடன் ரொமான்ஸ், நல்லவன் என ஏகப்பட்ட விஷயங்களை இந்த சீசனில் பாலாஜி முருகதாஸ் செய்து நிகழ்ச்சியை பரபரப்பாக்கி வருகிறார். டைட்டிலை தட்டிச் செல்வாரா? இல்லை ரன்னர் அப் ஆவாரா? என்ற ரீதியில் அவரது கேம் ஓடிக் கொண்டு இருக்கிறது.

அதிகளவில் ஹேட்டர்கள்

அதிகளவில் ஹேட்டர்கள்

மேலும், பிக் பாஸ் தமிழ் சீசன்களிலேயே அதிகளவில் ஹேட்டர்களையும் பெண் ரசிகைகளையும் கொண்டு கலக்கி வருகிறார் பாலாஜி முருகதாஸ். பிக் பாஸ் வீட்டிலும் பாலாவை சுற்றியே எல்லா பெண்களும் சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது. மிஸ்டர் இன்டர்நேஷனல் பட்டம் வென்ற அவர் வெளியேவும் பிளேபாயாக இருந்தார் எனக் கூறப்படுகிறது.

யாஷிகாவுடன் நெருக்கமாக

யாஷிகாவுடன் நெருக்கமாக

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே யாஷிகா ஆனந்த் உடன் கனெக்‌ஷன் நிகழ்ச்சியில் 2 ஆண்டுகளுக்கு முன்பே கலந்து கொண்டவர் தான் பாலாஜி முருகதாஸ். இவரும் விஜய் டிவி புராடக்ட் தான். மேலும், யாஷிகா ஆனந்த் உடன் பாலாஜி முருகதாஸ் எடுத்துக் கொண்ட ஏகப்பட்ட நெருக்கமான போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டன.

குடி போதையில் விபத்து

குடி போதையில் விபத்து

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது பெற்றோர்களை குடிகாரர்கள் என குற்றம்சாட்டி சமூக வலைதளங்களில் அனுதாபத்தை பெற முயன்ற பாலா, குடி போதையில் கார் ஓட்டி உணவு விநியோகிக்கும் நபரின் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்படுத்தினார். அந்த விபத்து சிக்கலில் இருந்து யாஷிகா ஆனந்த் பாலாவை காப்பாற்ற போராடியது குறிப்பிடத்தக்கது.

என்ன உறவு

என்ன உறவு

இந்நிலையில், சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர் பாலாவுக்கும் உங்களுக்கும் என்ன உறவு என்ற கேள்வியை யாஷிகாவிடம் எழுப்பிய நிலையில், அதற்கு முதன் முறையாக யாஷிகா மனம் திறந்து அளித்த பதில் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், ஏகப்பட்ட சந்தேகங்களையும் கூடவே நெட்டிசன்களிடம் எழுப்பி உள்ளது.

நெருங்கிய நட்பு

நெருங்கிய நட்பு

"பாலாவுக்கும் எனக்கும் முன்பு நெருங்கிய நட்பு இருந்தது. இந்த சீசனில் பாலாவுக்கு கிடைத்திருக்கும் புகழ் எனக்கு ரொம்ப சந்தோஷத்தை தருகிறது. இந்த நாளுக்காக அவர் ரொம்ப நாளாக காத்திருந்தார்" என அந்த ரசிகரின் கேள்விக்கு யாஷிகா பதில் அளித்துள்ளார். ஷிவானியுடன் இப்போது இருப்பது போன்றே அன்பா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

டாட்டூவில் யார் பெயர்

டாட்டூவில் யார் பெயர்

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் சர்ச்சை போட்டியாளர் பாலாஜி முருகதாஸ் குறித்து முதன்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் தமிழ் சீசன் 2ல் போட்டியாளராக யாஷிகா ஆனந்த் கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், யாஷிகா ஆனந்தின் பதில் பிக் பாஸ் ரசிகர்களை பரபரப்பு அடைய செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X