பிங்க் உடையில் பிக்பாஸ் நடிகை.. செல்லாது செல்லாது வேற ஸ்டில்தான் வேணும்.. அடம் பிடிக்கும் ஃபேன்ஸ்!
சென்னை: பிங்க் நிற உடையில் பிரபல பிக்பாஸ் நடிகை வெளியிட்டுள்ள ஸ்டில்ஸ் வைரலாகி வருகிறது.
Recommended Video
பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்தவர்கள் லிஸ்ட்டில் இருக்கிறார், நடிகை யாஷிகா ஆனந்த்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது ஏதாவது சர்ச்சைகளிலும் சிக்குவதும் வழக்கம்.

சோசியல் மீடியா
தமிழில், கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, மணியார் குடும்பம், நோட்டா. கழுகு 2 உட்பட சில படங்களில் நடித்த யாஷிகா, இப்போது ஆரவ், ஆஷிமா நர்வால் நடிக்கும் ராஜபீமா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பான மாயா, ரோஜா ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ள யாஷிகாவுக்கு சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட ரசிகர்கள்.

கிளாமர் ஸ்டில்ஸ்
அவர்களை ஏமாற்ற விரும்பாத யாஷிகா, அடிக்கடி தனது கிளாமர் ஸ்டில்களை அதில் வெளியிட்டு வருகிறார். குண்டா இருக்கீங்க என்று அவர் மீது பலர் விமர்சனம் வைக்க, இந்த லாக்டவுனில் கடினமாக ஒர்க்கவுட் செய்து லுக்கை மாற்றி இருக்கிறார். சோசில் மீடியாவில் சமீபகாலமாக யாஷிகா வெளியிடும் போட்டோஸ், கன்னா பின்னாவென வைரலாகி வருகிறது.

போட்டோஷூட்
லைக்ஸ்களுக்கும் கமென்ட்களுக்கும் பஞ்சமே இல்லை. யாஷிகா, சமீபத்தில் புதிதாக போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன், தினம் ஒன்று என அவர் வெளியிட்ட அந்த ஹாட் போட்டோஸ் சமூக வலைதளங்களில் வைரலாயின.
பின்னர் அந்த போட்டோஷூட் வீடியோவையும் வெளியிட்டிருந்தார். அதுவும் சோசியல் மீடியாவில் வைரலானது.

செல்லாது செல்லாது
இந்நிலையில் இப்போது புதிய ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். பிங்க் நிற உடையில் அவர் வெளியிட்டுள்ள இந்த ஸ்டில்ஸுக்கும் ஏகப்பட்ட லைக்ஸ். கமென்ட்ஸ். ஒருவர், செல்லாது செல்லாது எங்களுக்கு வேற போட்டோதான் வேணும் என்று கூறியுள்ளார். நம்ப முடியாத மாற்றம் என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

பார்பி பொம்மை
இன்னொரு நெட்டிசன், பார்பி பொம்மை மாதிரியே இருக்கீங்க, நம்ப முடியாத மாற்றம் என்று கூறியுள்ளார். பலர் மிரட்டல், செம என்று அப்படி இப்படி வர்ணிக்க, ஒருவர், நடிப்புல கவனம் செலுத்துங்க யாஷிகா, போட்டோஷூட்ல இல்லை என்று அட்வைஸ் செய்திருக்கிறார். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











