என்ன யாஷிகா இதெல்லாம்..? முதல்ல ஷாக் கொடுத்த போட்டோ.. இப்ப அதகள வீடியோ.. தெறிக்கும் பேன்ஸ்!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
தமிழில், கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, மணியார் குடும்பம், நோட்டா. கழுகு 2 உட்பட சில படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த்.
இப்போது ஆரவ், ஆஷிமா நர்வால் நடிக்கும் ராஜபீமா படத்தில் நடித்து வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி
சன் டிவியில் ஒளிபரப்பான மாயா, ரோஜா ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ள யாஷிகா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் இன்னும் பிரபலமானார். இதையடுத்து தனியாக ரசிகர் பட்டாளம் உருவானது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை யாஷிகா, அடிக்கடி தனது கிளாமர் ஸ்டில்களை வெளியிட்டு வருவார்.

லாக்டவுனில் ஒர்க்கவுட்
குண்டா இருக்கீங்க என்று அவர் மீது சொல்லப்படும் கமென்ட்டை மாற்ற வேண்டும் என நினைத்த அவர், இந்த லாக்டவுனில் கடினமாக ஒர்க்கவுட் செய்து தனது தோற்றத்தை மாற்றி இருக்கிறார். ஹாட் பியூட்டியான யாஷிகா வெளியிடும் ஒவ்வொரு புகைப்படங்களும் வேற லெவலில் வைரலாகி வருகிறது. அதற்கு எக்கச்சக்க லைக்ஸ்களும் ஆயிரக்கணக்கணக்கான கமென்ட்களும் வந்துவிழுகின்றன.

புதிய போட்டோஷூட்
நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் புதிதாக போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் தினம் ஒன்று என அவர் வெளியிட்ட அந்த ஹாட் போட்டோஸ் சமூக வலைதளங்களில் வைரலாயின. இந்த நெட்டிசன்கள், "என்னம்மா நீ இப்படி பண்றியேம்மா.. பாவம்மா இந்த ஆம்பள பசங்க" என மீம் போட்டு கமென்ட் அடிந்திருந்தனர்.

மேக்கிங் வீடியோ
யாஷிகாவின் அந்த புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட ஆபாச கமெண்ட்டுகளும், அழகான வர்ணனைகளும் குவிந்திருந்தன. இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த், அந்த போட்டோஷூட் மேக்கிங் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது. இதற்கும் ரசிகர்கள் கன்னாபின்னாவென்று தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











