முதல்வர் ஸ்டாலின் உடன் செல்ஃபி.. செம சந்தோஷத்தில் பிக் பாஸ் பிரபலம்.. குவியுது லைக்ஸ்!
சென்னை: முதல்வர் ஸ்டாலின் உடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த்.
இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள யாஷிகா ஆனந்த் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தமிழ்நாடு முதல்வரான பின்னர், இன்று காலை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் ஓட்டிச் சென்ற மு.க. ஸ்டாலினை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

சைக்கிள் ஓட்டிய சிஎம்
தனது உடலை எப்போதுமே ஃபிட்டாக வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் ஓட்டுவது, உடற்பயிற்சி செய்வது என ஏகப்பட்ட விஷயங்களை தொடர்ந்து செய்து வருகிறார். தமிழ்நாடு முதல்வராக பதவியேற்ற பின்னர், கான்வாய்களை எல்லாம் விட்டு விட்டு எப்போதும் போல சைக்கிள் ஓட்டி வந்த ஸ்டாலினை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். காலையிலேயே அவரது புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகின.

முதல்வருடன் செல்ஃபி
கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் ஓட்டிச் சென்ற முதல்வர் ஸ்டாலினை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து அவருடன் இணைந்து செல்ஃபிக்களை எடுத்து மகிழ்ந்தனர். அப்படி செல்ஃபி எடுத்து சந்தோஷப்பட்ட மக்களில் ஒருவர் தான் நம்ம பிக் பாஸ் பிரபலம் யாஷிகா ஆனந்த்.

குவியுது லைக்ஸ்
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உடன் செம க்யூட்டாக நடிகை யாஷிகா ஆனந்த் எடுத்துக் கொண்ட செல்ஃபியை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள், வேற லெவலுங்க நீங்க என கமெண்ட் செய்து லைக்குகளை குவித்து வருகின்றனர். நடிகை யாஷிகாவின் இந்த செல்ஃபி செம வைரலாகி வருகிறது.

செம பிசி
இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான போட்டோக்களை போட்டு லைக்குகளை குவித்து வரும் நடிகை யாஷிகா ஆனந்த், சல்பர், இவன் தான் உத்தமன், எஸ்.ஜே. சூர்யாவின் படம் என செம பிசியாக இருக்கிறார். முதல்வருடன் செல்ஃபி எடுத்த சந்தோஷத்தை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார் யாஷிகா ஆனந்த்.


Click it and Unblock the Notifications











