Yashika Anand: 13 வயதில் எனக்கு நடந்த பாலியல் கொடுமை… மனம் திறந்த யாஷிகா ஆனந்த்!

சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த், 13 வயதில் பொது இடத்தில் தனக்கு நடந்த பாலியல் சீண்டல் குறித்து மனம் திறந்து பேட்டி உள்ளார்.

பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த யாஷிகா ஆனந்த் மாடலிங்கில் ஆர்வமுடையவராக இருந்தார். இதையடுத்து, கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான யாஷிகா ஆனந்த். அதன் பிறகு சந்தானத்துக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிப்பதாக இருந்து பின்னர் அப்படத்திலிருந்து நீக்கப்பட்டார். நடிகை யாஷிகா ஆனந்த், கிளுகிளுப்பான உடைகளில் தூக்கலான அழகை காட்டி சோஷியல் மீடியாவில், தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

Yashika Anand has given an interview about being harassed at the age of 13

திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்துவந்த இவர், இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். இரட்டை அர்த்த வசனம், விவகாரமான கதை அம்சம் கொண்ட இந்த படத்தின் மூலம் ரசிகர்களுக்கு தெரிந்து முகமாக மாறினார். இதையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர், குட்டி குட்டி டவுசரை போட்டுக் கொண்டு, பிக் பாஸ் வீட்டை கிளுகிளுப்பாக வைத்து இருந்தது மட்டுமில்லாமல் ரசிகர்களையும் மகிழ்ச்சியுடன் வைத்து இருந்தார். என்னத்தான் இவர் ஓவர் கவர்ச்சியாக பிக்பாஸ் வீட்டில் இருந்தாலும் ரசிகர்கள் இவருக்கு வாக்களிக்காததால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

சில நொடிகளில் படத்தில்: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தோழிகளுடன் ஜாலியாக காரில் சென்றபோது வேகமாக காரை ஓட்டி விபத்தில் சிக்கி சில மாதங்கள் படுத்தபடுக்கையாக இருந்தார். இந்த விபத்தில் அவரது தோழி உயிரிழந்தார். அதன் பின் பழைய நிலைக்கு திரும்பிய யாஷிகா ஆனந்த், திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிப்பது, ஒரு பாடலுக்கு நடனமாடுவது என கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வருகிறார். யாஷிகா ஆனந்த் மற்றும் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் அண்மையில் சில நொடிகளில் படம் வெளியானது. அந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய யாஷிகா நான் தல அஜித் ரசிகை என்றார். இவரின் கைவசம் இவன் தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு படம் என கணிசமான படங்களை வைத்து இருக்கிறார்.

13 வயதில் பாலியல் சீண்டல்: இந்நிலையில் யாஷிகா யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் பொது இடத்தில் தனக்கு நடந்த கொடுமை குறித்து பேசி உள்ளார். அதில், நடிகர் சந்தானத்துடன் இனிமே இப்படித்தான் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்தேன். அந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்து கொண்டு இருந்தது. அப்போது, எனக்கு ஒருவன் பாலியல் தொல்லை கொடுத்து தவறான இடத்தில் தொட்டான்.

அந்த வயதில் அது குட் டச்சா இல்ல பேட் டச்சா என்று கூட எனக்குத் தெரியாது. இருந்தாலும், உடனே நான் அப்படியே திருப்பி, எட்டி உதைத்துவிட்டேன். அவன் அப்படியே விழுந்துவிட்டான். அவன் ஏன் அடிச்ச என்று எப்படி கேட்க முடியும், அது தான் என் தைரியம். நான் 13 வயதாக இருக்கும் போதே அப்படி செய்து இருக்கிறேன். பெண்களுக்கு தைரியம் தான் முக்கியம் என்று யாஷிகா ஆனந்த் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X