நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் காயம்...மருத்துவமனையில் அனுமதி

சென்னை : பிரபல மாடலான யாஷிகா ஆனந்த், கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு படங்கள் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் சிறிய ரோல்களில் நடித்தார். குறும் படங்கள், டிவி சீரியல்கள் சிலவற்றில் நடித்துள்ளார்.

Recommended Video

விபத்தில் சிக்கிய Yashika-வுக்கு தீவிர சிகிச்சை | Yashika Anand In Hospital | Tamil Filmibeat

2018 ல் விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 ல் போட்டியாளராக பங்கேற்று, பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்கு அதிக ரசிகர்களை பெற்ற யாஷியாவிற்கு பட வாய்ப்புகளும் அதிகம் வர துவங்கின. வெப் சீரிசிலும் நடித்தார்.

 கவர்ச்சி வேடங்களில் யாஷிகா

கவர்ச்சி வேடங்களில் யாஷிகா

இருட்டு அறையில் முரட்டுக் குத்து 2 ல் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார் யாஷிகா. தொடர்ந்து நோட்டா, ஜோம்பி உள்ளிட்ட படங்களில் நடித்து கவனிக்கப்படும் நடிகையானார். பொதுவாக கவர்ச்சி வேடங்களிலேயே அதிகம் நடித்து வந்தார்.

கைவசம் 5 படங்கள்

கைவசம் 5 படங்கள்

தற்போது இவன் தான் உத்தமன், ராஜ பீமா, கடமையை செய், பாம்பாட்டம், சல்ஃபர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் யாஷிகா. அத்துடன் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அதிதீவிர கவர்ச்சி காட்டி ஃபோட்டோஷுட் நடத்திய ஃபோட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார்.

ஹீரோயினாக நடிக்கும் யாஷிகா

ஹீரோயினாக நடிக்கும் யாஷிகா

இதில் கடமையை செய் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் யாஷிகா. நீண்ட நாட்களுக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கும் படம் இது. இறுதி கட்டத்தில் இருக்கும் இந்த படத்தின் ஷுட்டிங் விரைவில் நிறைவடைய உள்ளது.

விபத்தில் காயமடைந்த யாஷிகா

விபத்தில் காயமடைந்த யாஷிகா

இந்நிலையில் நேற்றிரவு காரில் தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றுள்ளார் யாஷிகா. பார்ட்டி முடிந்து திரும்பும் போது மாமல்லபுரம் அருகே அவர்கள் வந்த கார் விபத்திற்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த யாஷிகா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 யாஷிகாவின் தோழி உயிரிழப்பு

யாஷிகாவின் தோழி உயிரிழப்பு

யாஷிகாவுடன் காரில் சென்ற அவரது தோழி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் யாஷிகாவின் நண்பர்கள் இருவர் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X