Yashika Anand: என்ன ஒரு பக்கம் அப்படி.. ஒரு பக்கம் இப்படி இருக்கு.. யாஷிகாவை கலாய்க்கும் ஃபேன்ஸ்!
சென்னை: இருட்டு அறையில் முரட்டுக் குத்து நடிகை யாஷிக்காவுக்கும் நடிகர் அஜித் குமாரின் மச்சான் ரிச்சர்ட் ரிஷிக்கும் காதல் என கிசுகிசுக்கள் பரவி வரும் நிலையில், நடிகை யாஷிகா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
கவலை வேண்டாம் படத்தில் நீச்சல் குள பயிற்சியாளராக யாஷிகா நடித்த போதே, சிறுவன் அவருக்கு லிப் லாக் முத்தம் கொடுப்பது போல விவகாரமான காட்சிகள் படத்தில் அமைந்திருக்கும்.

அந்த படத்தில் இருந்து அவர் நடித்த பல படங்களிலும் டபுள் மீனிங் வசனங்களும் எல்லை மீறிய காட்சிகளும் தான் நிறைந்துள்ளன.
பிக் பாஸ் யாஷிகா ஆனந்த்: பிக் பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்டு பெரிய ரீச் அடையலாம் என நினைத்த யாஷிகா ஆனந்த். அடுத்தடுத்த சீசன்களுக்கு தன்னுடைய எக்ஸ் காதலர்களையும் ஆண் நண்பர்களையுமே போட்டியாளராக மறைமுகமாக அறிமுகப்படுத்தினார் என குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன.
நிரூப்பின் எக்ஸ் காதலி என யாஷிகா சொல்லப்பட்டாலும், அவருக்காக கடைசியில் பிக் பாஸ் வீட்டுக்குள்ளே வந்து சந்தித்து சென்றார் யாஷிகா ஆனந்த்.

பிரபலங்களுடன் காதல் கிசுகிசு: யாஷிகா ஆனந்த் மற்றும் பாலாஜி முருகதாஸ் நண்பர்கள் என சொல்லப்பட்டது. தம்பி ராமைய்யாவின் மகனை யாஷிகா காதலிக்கிறார் என கிசுகிசு கிளம்பியது.
நடிகர் எஸ்.ஜே. சூர்யாவுடன் கடமை செய் படத்தில் ஹீரோயினாக யாஷிகா நடித்த நிலையில், இருவரும் காதலிக்கின்றனர் என்றும் எஸ்ஜே சூர்யாவைத் தான் யாஷிகா திருமணம் செய்யப் போகிறார் என்றுமே பேச்சுக்கள் அடிபட்டன.
அஜித் மச்சான்: இந்நிலையில், அதெல்லாம் வதந்தி என்றும் நடிகர் அஜித் குமாரின் மனைவி ஷாலினியின் சகோதரரான நடிகர் ரிச்சர்ட் ரிஷியைத் தான் யாஷிகா ஆனந்த் காதலித்து வருகிறார் என இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியானதும் பரபரப்பு பற்றிக் கொண்டது.
ஆனால், இருவரும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறோம் அதன் புகைப்படங்கள் தான் வெளியாகின. மற்றப்படி எங்களுக்குள் காதலும் இல்லை கத்தரிக்காயும் இல்லை என திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களின் ஹீரோ ரிச்சர்ட் ரிஷி கூறி விட்டார்.
ஒவ்வொரு சைடும் ஒரு மாதிரி: இந்நிலையில், யாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட்டாக வெளியிட்ட போட்டோக்கள் மற்றும் கடைசியாக வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோவில் அவரது மேலாடை ஒவ்வொரு சைடும் ஒவ்வொரு விதமான டிசைன் கொண்டு படு கவர்ச்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதை அணிந்துக் கொண்டு கண்ணாடி பாலம் ஒன்றின் மீது பின்னழகையும் முன்னழகையும் காட்டியபடி யாஷிகா நடந்து செல்லும் வீடியோவை வெளியிட, அதை பார்த்த ரசிகர்கள் யாஷிகாவை பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











