'குண்டா இருந்தப்ப இன்னும் அழகா இருந்தீங்க..' வேறலெவல் லுக்கில் பிக் பாஸ் நடிகை.. ஃபேன்ஸ் கலாய்!
சென்னை: பிரபல பிக்பாஸ் நடிகை வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பிக் பாஸ் தந்த சில இளம் ஹீரோயின்களில் ஒருவர் யாஷிகா ஆனந்த். அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதும் இவர் வாடிக்கை.
சன் டிவியில் ஒளிபரப்பான மாயா, ரோஜா ஆகிய சீரியல்களில் நடித்துள்ள யாஷிகாவுக்கு சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட ரசிகர்கள்.

பேச்சு வார்த்தை
தமிழில், ஜீவாவின் கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு, மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2 உட்பட சில படங்களில் நடித்த யாஷிகா ஆனந்த், ஆரவ், ஆஷிமா நர்வால் நடிக்கும் ராஜபீமா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். இதையடுத்து மேலும் சில படங்களில் நடிக்க நடந்து வருகிறதாம் பேச்சு வார்த்தை.

யாஷிகாவின் ஆர்மி
சோசியல் மீடியாவில் சமீப காலமாக யாஷிகா வெளியிடும் புகைப்படங்கள் கண்டபடி வைரலாகி வருகிறது. எல்லாம் அவருடைய ஆர்மி (ரசிகர்கள்தான்) வேலை. சோசியல் மீடியா ரசிகர்களை ஏமாற்ற விரும்பாத அவர், அடிக்கடி கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

கவர்ச்சி போட்டோஷூட்
லைக்ஸ்களுக்கும் கமென்ட்களுக்கும் பஞ்சமே இல்லை. யாஷிகா, கடந்த மாதம் வெளியிட்ட, கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாயின. அதற்கு ரசிகர்கள் கண்டபடி கமென்ட்களை அள்ளி வீசியிருந்தனர். சிலர், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தோட 2 ஆம் பாகத்துல ஏன் நடிக்கலை? என்று கேட்டிருந்தனர்.

ராஜஸ்தானில் யாஷிகா
பின்னர் சேலையில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அதுவும் வைரலானது. இந்நிலையில், இப்போது ராஜஸ்தான் சென்றிருக்கிறார் நடிகை யாஷிகா ஆனந்த். அங்கிருந்து விதவிதமான புகைப்படங்களை, செம ஸ்டைலாக வெளியிட்டு இருக்கிறார், இன்ஸ்டாவில்.

இரண்டிலும் கலக்குறீங்க
இதற்கு நெட்டிசன்ஸ் கண்டபடி கமென்ட் போட்டுள்ளனர். எதுக்கு இப்படியொரு போஸ்? என்று சிலர், கொஞ்சம் குண்டா இருந்தப்ப, இன்னும் அழகா இருந்தீங்க என்றும் சிலர் கூறியுள்ளனர். நீங்க என்ன டிரெஸ் போட்டாலும் அது அழகுதான் என்றும் டிரெடிசனல், வெஸ்டர்ன் இரண்டிலும் கலக்குறீங்க என்றும் நெட்டிசன்ஸ் கூறியுள்ளனர்.
Recommended Video

ஆஹோ, ஓஹோ
பலர், அவர் அழகை ஆஹோ, ஓஹோவென ஓவராக வர்ணித்துள்ளனர். சிலர், நல்லபடியாவே போஸ் கொடுக்க மாட்டீங்களா? ஏன் இந்த மாதிரி ஆபாச போஸ்? என்று அவரை விளாசியுள்ளனர். யாஷிகாவின் இந்தப் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











