பலாத்கார வழக்கில் டிவி நடிகர் கைது.. ’சாமுராய்’ அனிதாவை தொடர்ந்து சப்போர்ட்டுக்கு வந்த ’யாஷிகா!
மும்பை: சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் பிரபல டிவி நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாகினி 3 தொடரின் மூலம் பிரபலமான பியர்ல் வி புரியை போலீசார் கைது செய்துள்ள நிலையில் அவருக்கு நடிகை அனிதா ஆதரவு தெரிவித்திருந்தார்.
சாமுராய் பட நாயகியை தொடர்ந்து தற்போது ஜாம்பி பட நாயகியான யாஷிகா ஆனந்தும் பியர்ல் வி புரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

டிவி நடிகர் கைது
தில் கி நசர் சே குப்சூரத் எனும் தொடர் மூலம் அறிமுகமான பியர்ல் வி புரி சிறுமி ஒருவருக்கு சினிமா மற்றும் சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் என கொடுக்கப்பட்டுள்ள புகாரின் பேரில் வெள்ளியன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகினி தொடரில்
பிரபல நாகினி சீரியலின் 3ம் பாகத்தில் நடித்துள்ள பியர்ல் வி புரிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். நாகார்ஜுனா ஏக் யோதா, பேபனா பியார், பிரம்மரக்ஷாஸ் 2 உள்ளிட்ட ஏகப்பட்ட தொடர்களிலும் நடித்துள்ள பியர்ல் வி புரி கைது செய்யப்பட்டது எதிராக ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

பாலியல் பலாத்காரம்
நடிக்க சான்ஸ் வாங்கித் தருவதாக டீனேஜ் பெண் ஒருவரை பியர்ல் வி புரி பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றியதாக அவர் மீது அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, கிழக்கு வசை பகுதியில் உள்ள வாலிவ் போலீஸ் போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்துள்ளனர்.

அனிதா ஆதரவு
பியர்ல் வி புரியுடன் நாகினி 3 தொடரில் நடித்த பாலிவுட் நடிகை அனிதா ஹாசனந்தனி பியர்ல் வி புரிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அவர் அப்படிப்பட்ட ஆள் கிடையாது என்றும், இந்த புகார் வேண்டுமென்றே அவரது பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார். விக்ரம் நடிப்பில் வெளியான சாமுராய் படத்தில் நாயகியாக நடித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

யாஷிகாவும் சப்போர்ட்
சாமுராய் பட நடிகை பியர்ல் வி புரிக்கு சப்போர்ட்டுக்கு வந்த நிலையில், ரசிகர்களும் புரியை விடுதலை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளை எழுப்பி வருகின்றனர் இந்நிலையில், நடிகை யாஷிகா ஆனந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பியர்ல் வி புரியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து அவருக்கு ஆதரவு கொடுத்துள்ளார்.

உண்மை வெளிவரும்
ஜாம்பி நடிகை யாஷிகா ஆனந்த் பதிவிட்டுள்ள ட்வீட்டில், பியர்ல் வி புரி மிகவும் அமைதியாக பேசக் கூடிய நபர். எனக்கு தெரிந்த நல்ல மனம் கொண்ட மனிதர்களில் அவரும் ஒருவர். உண்மை தெரியும் வரை பொறுமையுடன் காத்திருப்போம். அதுவரை #ISTANDWITHPEARL என்ற ஹாஷ்டேக்கை பதிவிட்டு என் நண்பர் திரும்பி வருவார் என நம்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











