முதல் முறையாக அப்படி ஒரு ரோலில் நடிக்கும் யாஷிகா ஆனந்த்.. வில்லன் யார் தெரியுமா?!
சென்னை: யாஷிகா ஆனந்த் முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் இளம் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான யாஷிகா, படங்களிலும் நடித்து வருகிறார்.
இருட்டறையில் முரட்டு குத்து, நோட்டா, கழுகு 2, ஸோம்பி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள யாஷிகா ஆனந்த், தற்போது இவன் தான் உத்தமன், ராஜ பீமா, கடமையை செய், பாம்பாட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

ஏராளமான ரசிகர்கள்
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள யாஷிகா ஆனந்த், அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இதனாலேயே சமூக வலைதளங்களில் அவரை ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

போலீஸ் அதிகாரியாக..
இந்நிலையில் யாஷிகா ஆனந்த் புதிய படம் ஒன்றில் இதுவரை நடித்திராத கேரக்டரில் நடிக்கவுள்ளார். அதாவது, அறிமுக இயக்குநர் புவன் இயக்கும் படம் சல்ஃபர். இந்தப் படத்தில் நடிகை யாஷிகா ஆனந்த், போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

காக்கி உடையில் கம்பீரமாய்..
இதன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் காக்கி உடையில் கம்பீரமாய் உட்காந்திருக்கிறார் யாஷிகா ஆனந்த். இந்தப் படத்தில் யாஷிகா ஆனந்துக்கு வில்லனாக இசையமைப்பாளர் சித்தார்த் விபின் நடிக்கிறார்.

இசையமைப்பாளர்
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்தவர் சித்தார்த் விபின். இதேபோல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் சித்தார்த் விபின், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, காஷ்மோரா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

முதல் முறையாக வில்லன்
இதுவரை நகைச்சுவை கேரக்டரில் நடித்து வந்த விபின், முதல் முறையாக வில்லனாக நடிக்கிறார். இந்தப் படத்தில் தனக்கான வில்லன் கேரக்டரில் நடிப்பதற்காக கூத்துப்பட்டறையில் சித்தார்த் விபின் பயிற்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











